ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''எப்போதும் பாலா அண்ணா உடன் துணை நிற்போம்''... 'வணங்கான்' விலகல் குறித்து சூர்யாவின் 2D நிறுவனம் பதில்!

''எப்போதும் பாலா அண்ணா உடன் துணை நிற்போம்''... 'வணங்கான்' விலகல் குறித்து சூர்யாவின் 2D நிறுவனம் பதில்!

சூர்யா - பாலா

சூர்யா - பாலா

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகி வந்த வணங்கான் திரைப்படத்தில் இருந்து சூர்யா விலகி உள்ளார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாலா அண்ணாவின் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து வணங்கானில் இருந்து விலகிக்கொள்கிறோம். எப்போதும் பாலா அண்ணா உடன் துணை நிற்போம் என்று சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகி வந்த வணங்கான் திரைப்படத்தில் இருந்து சூர்யா விலகி உள்ளார். இதனை இயக்குநர் பாலாவே அறிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டிருந்தார். அதில், “வணக்கம், என் தம்பி சூர்யாவுடன் இணைந்து 'வணங்கான்' என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.

என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு, ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம்கூட நேர்ந்துவிடக் இருக்கிறது கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.

எனவே 'வணங்கான்' திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது.

Also read... அனிருத் பாடலை காப்பியடித்துள்ளாரா தமன்? வாரிசு 'தீ தளபதி' பாடலை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!

நந்தாவில் நான் பார்த்த சூர்யா, பிதாமகன்-இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி வணங்கான்' படப்பணிகள் தொடரும்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட்டின் ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், பாலா அண்ணாவின் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து சூர்யா அவர்களும் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் வணங்கானில் இருந்து விலகிக்கொள்கிறோம். எப்போதும் பாலா அண்ணா உடன் துணை நிற்போம். என்றும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Suriya, Director bala