ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

’பொன்னியின் செல்வன்’ தமிழ் டீசரை வெளியிடுகிறார் நடிகர் சூர்யா

’பொன்னியின் செல்வன்’ தமிழ் டீசரை வெளியிடுகிறார் நடிகர் சூர்யா

பொன்னியின் செல்வன் டீசரை நாளை வெளியிடுகிறார் நடிகர் சூர்யா

பொன்னியின் செல்வன் டீசரை நாளை வெளியிடுகிறார் நடிகர் சூர்யா

தனது தம்பி கார்த்தி நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசரை வெளியிடுகிறார் நடிகர் சூர்யா.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் தமிழ் டீசரை நடிகர் சூர்யா நாளை வெளியிடுகிறார்.

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 6:00 மணிக்கு வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தை வெளியிடுகின்றனர்.

இதன் காரணமாக ஒவ்வொரு திரையுலகிலும் உள்ள முன்னணி நடிகர்களை கொண்டு பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசரை வெளியிடுகின்றனர்.

அந்த வகையில் தமிழ் டீசரை நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டீசரை வெளியிடுகிறார். அதே போல் இந்தியில் அமிதாப்பச்சனும், மலையாளத்தில் மோகன்லாலும்,  தெலுங்கில் மகேஷ்பாபுவும் வெளியிடுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவர்களை தவிர கன்னட மொழியில் ரக்ஷித் ஷெட்டி பொன்னியின் செல்வன் டீசரை வெளியிடுகிறார்.  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது தவிர சென்னை டிரேட் சென்டரில் டீசர் வெளியீட்டு விழா எளிய முறையில் நடைபெறுகிறது.

First published:

Tags: Actor Surya, Ponniyin selvan