Home /News /entertainment /

Suriya: கனவு காணுங்கள், அதை நம்புங்கள்... திரைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதையொட்டி சூர்யா ட்வீட்!

Suriya: கனவு காணுங்கள், அதை நம்புங்கள்... திரைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதையொட்டி சூர்யா ட்வீட்!

சூர்யா

சூர்யா

நேற்று நேருக்கு நேர் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதையொட்டி, சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து கொண்டாடினர் சூர்யா ரசிகர்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நடிகர் சூர்யா தான் திரைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதையடுத்து ஆசீர்வதிக்கப்பட்ட 25 ஆண்டுகள் என ட்வீட் செய்துள்ளார். 

    நடிகர் சூர்யா நடிப்பில் உருவான நேருக்கு நேர் திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 25 ஆண்டுகளாகிறது. இது தான் அவரது முதல் படம். இயக்குநர் வசந்த் இயக்கத்தில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் விஜய், சூர்யா, சிம்ரன், கௌசல்யா, ரகுவரன், சாந்தி கிருஷ்ணா என பலர் நடித்து இருந்தார்கள்.

    இதில் முதலில் விஜய்யுடன் இணைந்து நடிக்கவிருந்தவர் நடிகர் அஜித் தான். பின்பு சில காரணங்களால் அவர் விலக, அந்த வாய்ப்பு சூர்யாவுக்கு சென்றது. இதையடுத்து நேற்று நேருக்கு நேர் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதையொட்டி, சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து கொண்டாடினர் அவரது ரசிகர்கள்.

    கர்மாவுக்கு திருப்பிக் கொடுக்க தெரியும்... ரவீந்தர் சந்திரசேகரனை சாடிய வனிதா விஜயக்குமார்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    இந்நிலையில் தற்போது இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் சூர்யா, “உண்மையிலேயே அழகான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட 25 ஆண்டுகள்..! கனவு காணுங்கள், நம்புங்கள்..! உங்கள் சூர்யா” என்று தெரிவித்துள்ளார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Suriya

    அடுத்த செய்தி