Suriya: சூர்யா நடத்தும் கொரோனா தடுப்பூசி முகாம்!

சூர்யா

சென்னை மாநகராட்சியுடன் இணைந்து வரும் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் சூர்யா தடுப்பூசி முகாம் நடத்துகிறார்.

  • Share this:
    தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை பல்வேறு அமைப்புகள், சங்கங்களுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தி, தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தி வருகிறது. அந்தவகையில் நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் பணிபுரிகிறவர்களுக்கு வருகிற 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் சிறப்பு தடுப்பூசி முகாமை ஏற்பாடு செய்துள்ளார்.

    சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ’36 வயதினிலே’, ’பசங்க 2’, ’24’, ’மகளிர் மட்டும்’, ’கடைக்குட்டி சிங்கம்’, ’உறியடி 2’, ’பொன்மகள் வந்தாள்’ ஆகிய படங்களை தயாரித்துள்ளது. ’சூரரைப் போற்று’ படத்தின் இணைதயாரிப்பும் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தான். இப்போது அரிசில் மூர்த்தி இயக்கத்தில் வாணி போஜன், ரம்யா பாண்டியன் நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறது.

    2டி என்டர்டெயின்மெண்டில் அதிகம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்காக சென்னை மாநகராட்சியுடன் இணைந்து வரும் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் சூர்யா தடுப்பூசி முகாம் நடத்துகிறார். இந்தி, தெலுங்கு திரைப்பட உலகிலும் இதுபோல் அரசுடன் இணைந்து தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தவிர, சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் தனது 40 வது படத்தில் நடித்து வருகிறார். வரும் 12-ஆம் தேதி இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது. அத்துடன் கூட்டத்தில் ஒருத்தன் படத்தை இயக்கியவரின் புதிய படத்திலும் நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல், அவர் தற்போது இயக்கிவரும் விடுதலை முடிந்ததும் தொடங்க உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: