• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வார்த்தைகள் இன்றி நெகிழ்கிறேன்... முதல்வர் கடிதத்துக்கு சூர்யாவின் நெகிழ்ச்சி பதிவு

வார்த்தைகள் இன்றி நெகிழ்கிறேன்... முதல்வர் கடிதத்துக்கு சூர்யாவின் நெகிழ்ச்சி பதிவு

சூர்யா

சூர்யா

ஜெய் பீம் படம் இன்று நள்ளிரவு முதல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

  • Share this:
    ஜெய் பீம் படத்தையும், சூர்யாவையும் பாராட்டி முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு, வார்த்தைகள் இன்றி நெகிழ்கிறேன் என பதிவு இட்டுள்ளார் நடிகர் சூர்யா.

    இருளர் பழங்குடியினருக்கு நேர்ந்த போலீஸ் கொட்டடி கொடுமைகளை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் ஜெய் பீம். ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு வழக்கறிஞராக இருந்த போது நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தை நேற்றுப் பார்த்த முதல்வர் ஸ்டாலின் படத்தையும், படக்குழுவினரையும், முக்கியமாக சூர்யாவையும் பாராட்டி நீண்ட கடிதம் எழுதியிருந்தார். அதில், சூர்யா இருளர் பழங்குடியினர் மேம்பாட்டிற்கு ஒரு கோடி அளித்ததையும் பாராட்டியிருந்தார்.

    முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ஸ்டாலின் எழுதியிருக்கும் முதல் நீண்ட பாராட்டுக் கடிதம் இது. இதற்கு பதிலளித்திருக்கும் சூர்யா, "வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உணர்வுப்பூர்வமான பாராட்டு, ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறது. ஜெய்பீம் படக்குழுவினர் அனைவரின் சார்பாகவும் நமது தமிழக முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்…" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.



    ஜெய் பீம் படம் இன்று நள்ளிரவு முதல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. படத்தைப் பார்த்த அனைவரும் பாராட்டி வரும் நிலையில், படம் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: