• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • உண்மையான சமூக மாற்றங்களை அரசும், அரசியல் இயக்கங்களுமே உருவாக்க முடியும் - சூர்யா

உண்மையான சமூக மாற்றங்களை அரசும், அரசியல் இயக்கங்களுமே உருவாக்க முடியும் - சூர்யா

சூர்யா

சூர்யா

பாதிக்கப்படும் மக்களின் பிரச்னைகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது மட்டுமே ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கம்.

  • Share this:
    வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு நடிகர் சூர்யா தனது நன்றியை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ளார். சூர்யாவின் 39-வது படமான இதில், பிரகாஷ் ராஜ், கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

    இருளர் சமூகத்தை மையப்படுத்தி, உண்மை கதையை அடிப்படையாக வைத்து இயக்கப்பட்ட ஜெய் பீம் திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி, பிரபலங்களிடமும், ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

    இதையடுத்து ஜெய் பீம் படத்தையும், அதில் நடித்த சூர்யாவையும் பாராட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு தனது நன்றியை தெரிவித்து சூர்யாவும் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.



    அதில், ‘மக்கள்தொகையில் மிகச் சிறுபான்மையினராக இருக்கும் பழங்குடிகள் நலன் சார்ந்து தாங்களும் தங்கள் இயக்கமும் தொடர்ந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தாங்கள் குறிப்பிட்டதைப் போல, மாண்புமிகு தமிழக முதல்வர் பழங்குடியின மக்களின் நீண்டகால பிரச்னைகளுக்கு தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது அனைவருக்கும் மிகுந்த மனநிறைவை தந்துள்ளது.



    பாதிக்கப்படும் மக்களின் பிரச்னைகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது மட்டுமே ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கம். கவனப்படுத்துவது மட்டுமே கலைப்படப்பின் மூலம் சாத்தியம். உண்மையான சமூக மாற்றங்களை அரசும், அரசியல் இயக்கங்களும் மட்டுமே உருவாக்க முடியும்.

    ஊக்கமூட்டும் தங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி' என்று தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: