முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அண்ணணா பொறந்துட்டு பட்ற பாடு இருக்கே... தம்பி கார்த்தியை கிண்டலடித்த சூர்யா!

அண்ணணா பொறந்துட்டு பட்ற பாடு இருக்கே... தம்பி கார்த்தியை கிண்டலடித்த சூர்யா!

சூர்யா - கார்த்தி

சூர்யா - கார்த்தி

அவர் தனது ஒவ்வொரு மைனஸையும் மிகப்பெரிய பிளஸ்ஸாக மாற்றுவதற்காக இரவும் பகலும் உழைத்தார். தனது சொந்த சாதனைகளை மிஞ்சுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

திரைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதையொட்டி தன்னை வாழ்த்திய தனது தம்பி கார்த்தியை கிண்டலடித்திருக்கிறார் நடிகர் சூர்யா.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான நேருக்கு நேர் திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 25 ஆண்டுகளாகிறது. இது தான் அவரது முதல் படம். இயக்குநர் வசந்த் இயக்கத்தில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் விஜய், சூர்யா, சிம்ரன், கௌசல்யா, ரகுவரன், சாந்தி கிருஷ்ணா என பலர் நடித்து இருந்தார்கள்.

இதில் முதலில் விஜய்யுடன் இணைந்து நடிக்கவிருந்தவர் நடிகர் அஜித் தான். பின்பு சில காரணங்களால் அவர் விலக, அந்த வாய்ப்பு சூர்யாவுக்கு சென்றது. இதையடுத்து நேற்று நேருக்கு நேர் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதையொட்டி, சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து கொண்டாடினர் அவரது ரசிகர்கள்.

இந்நிலையில் ட்விட்டரில் அண்ணன் சூர்யாவை வாழ்த்தும் வகையில், “அவர் தனது ஒவ்வொரு மைனஸையும் மிகப்பெரிய பிளஸ்ஸாக மாற்றுவதற்காக இரவும் பகலும் உழைத்தார். தனது சொந்த சாதனைகளை மிஞ்சுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார். ஒரு நபராக, அவர் ஏற்கனவே இதயத்தை இன்னும் பெரிதாக்கினார், ஆயிரக்கணக்கான தகுதியான குழந்தைகளின் வாழ்க்கையை வடிவமைத்தார். அவர் தான் என் சகோதரன். #25YearsOfCultSuriyaism” என்று தெரிவித்திருந்தார் கார்த்தி.

கடவுள் எனக்காக டன்சோவில் அனுப்பிய பரிசு நீ... மனைவி மகாலட்சுமியை புகழ்ந்த ரவீந்தர்!

அவரின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்திருக்கும் சூர்யா, “வந்தியத்தேவா! ❤️ அண்ணணா பொறந்துட்டு பட்ற பாடு இருக்கே!!” என கிண்டலடித்திருக்கிறார்.

First published:

Tags: Actor Karthi, Actor Suriya