ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Suriya 42: இலங்கையில் சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பு!

Suriya 42: இலங்கையில் சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பு!

சிவா - சூர்யா

சிவா - சூர்யா

இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் அல்லது ஏப்ரல் 2023-க்குள் முழுமையாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    சூர்யாவின் 42-வது படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் துவங்கவிருக்கிறது.

    சூர்யா நடிப்பில் தற்காலிகமாக 'சூர்யா 42' என்று அழைக்கப்படும் படம் ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. இதனை இயக்குநர் சிவா இயக்குகிறார். இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவா மற்றும் சென்னையில் நிறைவடைந்தது. தற்போது, ​​படக்குழு இலங்கை சென்று வனப்பகுதியில் படப்பிடிப்பை நடத்த உள்ளது.

    60 நாட்கள் நடக்கும் இந்த ஷெட்யூலில், படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் 1000 வருடங்கள் பழமையான கதையை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. கோவாவில் இன்று படப்பிடிப்பை முடித்ததும், அடுத்த சில நாட்களில் படத்தின் அடுத்த அட்டவணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திருமண தேதி, பத்திரிக்கை இரண்டிலும் அம்மாவை முன்னிலைப்படுத்திய கெளதம் கார்த்திக்!

    இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் அல்லது ஏப்ரல் 2023-க்குள் முழுமையாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சூர்யாவின் நடிப்பில் வெளியாகவிருக்கும் அதிக பட்ஜெட் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு அவர், 5 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. 10 மொழிகளில் 3டி பீரியடிக் டிராமாவாக உருவாகி இரண்டு பாகங்களாக வெளியாகும் இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Suriya