ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Sarpatta Paramparai: 'நா யார்ன்னு எல்லாருக்கும் நிரூபிக்குற நேரம் இது’ சார்பட்டா பரம்பரை ட்ரைலர்!

Sarpatta Paramparai: 'நா யார்ன்னு எல்லாருக்கும் நிரூபிக்குற நேரம் இது’ சார்பட்டா பரம்பரை ட்ரைலர்!

சார்பட்டா பரம்பரை

சார்பட்டா பரம்பரை

சார்பட்டா பரம்பரை படத்தின் ட்ரைலரை நடிகர் சூர்யா தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் ட்ரைலரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

  கபாலி, காலா என ரஜினியை வைத்து அடுத்தடுத்த படங்களை இயக்கிய பா.ரஞ்சித் தற்போது இயக்கியிருக்கும் திரைப்படம் சார்பட்டா பரம்பரை. வடசென்னையில் இயங்கி வந்த பாக்ஸிங் அணிகளை மையப்படுத்திய இந்தப் படத்தை கே9 ஸ்டுடியோஸுடன் இணைந்து ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

  ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன், அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சார்பட்டா பரம்பரை திரையரங்கில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. திரையரங்குகள் திறப்பது தள்ளிப் போவதால் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில் தற்போது சார்பட்டா பரம்பரை படத்தின் ட்ரைலரை நடிகர் சூர்யா தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். குழுவினரின் கடின உழைப்பு திரையில் நன்கு தெரிவதாகக் குறிப்பிட்டு, ரஞ்சித் மற்றும் குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சார்பட்டா பரம்பரைக்கும் இடியப்ப பரம்பரைக்கும் இடையில் நடக்கும் பாக்ஸிங் போட்டியை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. இடியப்ப பரம்பரையிடம் அனைவரும் தோற்றுப் போக, கடைசியில் ஆர்யா தன்னை நிரூபித்து எப்படி வெற்றி பெறுகிறார் என்பதை சுவாரஸ்யமாக படமாக்கியிருக்கிறார்கள்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Arya, Actor Suriya, Pa. ranjith