• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Actor Vivek: கண்களை குளமாக்கும் விவேக்கின் கடைசி நிகழ்ச்சி - ப்ரோமோவை பகிர்ந்த சூர்யா

Actor Vivek: கண்களை குளமாக்கும் விவேக்கின் கடைசி நிகழ்ச்சி - ப்ரோமோவை பகிர்ந்த சூர்யா

விவேக்

விவேக்

'நடிகர் விவேக் சாரின் கடைசிப் படைப்பைப் பகிர்ந்துகொள்வது ஒரு கெளரவம்'

  • Share this:
    நடிகர் விவேக் இறுதியாக கலந்துக் கொண்ட காமெடி நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யா தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் விவேக். இவர் கடந்த ஏப்ரல் 17-ம் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். இது திரைப்பிரபலங்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் துக்கத்தை ஏற்படுத்தியது. தனது காமெடியில் பகுத்தறிவு சிந்தனைகளையும், சமூக கருத்துக்களையும் தூக்கலாக வைத்து பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார் விவேக். அவரது திடீர் மரணம் ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.

    விவேக்கின் நடிப்பில் அரண்மனை 3 மற்றும் யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆகிய படங்கள் வெளியாக இருக்கிறது. தவிர, மிர்ச்சி சிவாவுடன் அவர் தொகுத்து வழங்கிய ’LOL: எங்க சிரி பாப்போம்’ எனும் காமெடி ரியாலிட்டி ஷோ அமேசான் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது.



    நடிகர்கள் பிரேம்ஜி, சதிஷ், பவர்ஸ்டார் சீனிவாசன், டிவி பிரபலம் புகழ், நடிகை ஆர்த்தி உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் இதில் கலந்துக் கொண்டுள்ளார்கள். சிரிக்காமல் இருக்க வேண்டும் என்பது தான் இந்நிகழ்ச்சியின் டாஸ்க். 6 எபிசோடுகளாக ஒளிபரப்பாகவுள்ள இந்த காமெடி ரியாலிட்டி சீரிஸ் வரும் ஆகஸ்டு 27-ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகிறது.



    இதன் ப்ரோமோ கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் தற்போது அதன் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ”அவர் நம் இதயங்களில் என்றென்றும் வாழ்வார்... நடிகர் விவேக் சாரின் கடைசிப் படைப்பைப் பகிர்ந்துகொள்வது ஒரு கெளரவம், நம்மை சிரிக்க வைத்ததுடன், சமூகப் பொறுப்புள்ள மற்றும் முற்போக்கான எண்ணங்களையும் கடத்தியவர்” எனக் குறிப்பிட்டு நடிகர் விவேக்கின் கடைசி நிகழ்ச்சியான ’LOL: எங்க சிரி பாப்போம்’ ப்ரோமோவை பகிர்ந்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: