ரிலீசுக்கு முன்பே பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய சூரரைப் போற்று!

ரிலீசுக்கு முன்பே பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய சூரரைப் போற்று!
சூரரைப் போற்று செகண்ட் லுக்
  • Share this:
சூரரைப் போற்று திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காப்பான் படத்தை அடுத்து சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் தீம் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.


தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ள நிலையில் இந்தியிலும் படத்தை ரீமேக் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் படத்தில் நடிக்கும் நடிகர்கள் உட்பட மற்ற விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியிலும் சூரரைப் போற்று திரைப்படத்தை சுதா கொங்கராவே இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: இந்தியன் 2 படிப்பிடிப்பு விபத்து - 6 பேரிடம் வாக்குமூலம் பெற்ற போலீஸ்!

First published: February 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்