• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அச்சமில்லை, அச்சமில்லை: மாணவர்கள் தற்கொலை செய்யக்கூடாது - சூர்யா வலியுறுத்தல்

அச்சமில்லை, அச்சமில்லை: மாணவர்கள் தற்கொலை செய்யக்கூடாது - சூர்யா வலியுறுத்தல்

சூர்யா

சூர்யா

மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளக் கூடாது என்று நடிகர் சூர்யா வலியுறுத்தியுள்ளார்.

  • Share this:
    தமிழ்நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நீட் தேர்வு நடைபெற்றது. நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக இந்த ஆண்டு மட்டும் இதுவரையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் யாரும் எக்காரணம் கொண்டும் தற்கொலை செய்துகொள்ளக் கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வலியுறுத்திவருகின்றனர்.

    இந்தநிலையில், நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘அச்சமில்லை, அச்சமில்லை அச்சமில்லை என்பதில்லையே.. உச்சிமீது வான்இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்பெதில்லையே... மாணவர்கள் எல்லாரும் அச்சமில்லாமல் நம்பிக்கையுடன் இருக்கவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். கடந்த மாதம் இருந்த எதோவொரு மிகப்பெரிய கவலை, இல்லை பிரச்னை தற்போது இருக்கிறதா என்று யோசித்துப்பாருங்கள்.

    அது தற்போது குறைந்திருக்கும் அல்லது இல்லாமல் போயிருக்கும். உங்கள் உயிரைவிட தேர்வு பெரிதல்ல. உங்கள் மனதுக்கு கஷ்டமாக இருக்கா உங்களுக்கு பிடித்தவர்களிடம் மனதுவிட்டு பேசுங்கள். இந்தப் பயம், கவலை, விரக்தி இதெல்லாம் கொஞ்சநேரத்தில் மறையும் விஷயங்கள். இந்த தற்கொலை என்பது உங்கள் ரொம்ப விரும்பும் குடும்பத்துக்கும் நீங்கள் தரும் வாழ்நாள் தண்டனை. நான் நிறைய தேர்வுகளில் தோல்வியடைந்துள்ளேன். மதிப்பெண், தேர்வு இது மட்டும் வாழ்க்கையில்லை.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சாதிப்பதற்கு அத்தனை விஷயங்கள் இருக்கு. உங்களைப் புரிந்துகொள்ளவும், நேசிக்கவும் நிறைய பேர் இருக்கிறோம். நம்பிக்கையும், தைரியமும் இருந்தால் வாழ்வில் நிறைய சாதிக்கலாம். அச்சமில்லை, அச்சமில்லை.. அச்சமென்பது இல்லையே’ என்று தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: