தம்பி படத்தை தயாரிக்கும் அண்ணன் சூர்யா!

சூர்யா - கார்த்தி

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த கொம்பன் பி அண்ட் சியில் பட்டையை கிளப்பியது.

  • Share this:
    கார்த்தி நடிக்கும் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்க உள்ளது.

    கார்த்தி தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இதில் இவர்தான் வந்தியதேவனாக பிரதான வேடம் ஏற்றுள்ளார். ஜெயம் ரவி, விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்த நிலையில், செப்டம்பர் முதல் வாரத்தில் கார்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பொன்னியின் செல்வன் முடிந்ததும் பி.எஸ்.மித்ரனின் சர்தார் படத்துடன், முத்தையா இயக்கும் புதிய படத்திலும் நடிக்க உள்ளார் கார்த்தி. இதில் முத்தையா படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதற்கு முன் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த கொம்பன் பி அண்ட் சியில் பட்டையை கிளப்பியது. கடைக்குட்டி சிங்கத்துக்கு முன் கடைகோடி கிராமம் வரை கார்த்தியை கொண்டு சேர்த்த படம் கொம்பன். ஸ்டுடியோ கிரீன் படத்தை தயாரித்திருந்தது.

    கார்த்தியின் கடைக்குட்டி சிங்கத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் ஏற்கனவே தயாரித்திருந்த நிலையில், இரண்டாவது படமாக முத்தையா படத்தை தயாரிக்கிறார் சூர்யா.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: