• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Suriya: சூரரைப்போற்று படத்தை இந்தியில் தயாரிக்கும் சூர்யா!

Suriya: சூரரைப்போற்று படத்தை இந்தியில் தயாரிக்கும் சூர்யா!

சூரரைப்போற்று சூர்யா

சூரரைப்போற்று சூர்யா

சூரரைப்போற்று திரைப்படத்துக்கு கிடைத்த அன்பும் பாராட்டும் இதுவரை பார்த்திராதது.

  • Share this:
    ’சூரரைப்போற்று’ படத்தை இந்தியில் தயாரிப்பதாக நடிகர் சூர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ படம் கடந்த வருடம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் மோகன் பாபு, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட மேலும் பலர் நடித்து இருந்தனர். விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாரானது.

    ஓடிடி-யில் வெளியாகிய ‘சூரரைப்போற்று’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய்குமார் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    இந்தியில் உருவாகும் ‘சூரரைப்போற்று’ படத்தையும் சுதா கொங்கராவே இயக்குகிறார். இதனை சூர்யா தனது 2டி பட நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். ”சூரரைப்போற்று திரைப்படத்துக்கு கிடைத்த அன்பும் பாராட்டும் இதுவரை பார்த்திராதது. இந்த கதையை நான் முதன்முதலில் கேட்டதில் இருந்தே இது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கான படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஏனென்றால் அதன் ஆன்மா அப்படிப்பட்டது. பிறருக்கு உத்வேகத்தை தரும் கேப்டன் கோபிநாத்தின் கதையை இந்தியில், அபண்டன்ஷியா என்டெர்டெய்ன்மெண்டுடன் இணைந்து தயாரிப்பது எனக்கு அதிக மகிழ்ச்சியை தருகிறது" என்றார்.

    அதோடு குழுவினருடன் எடுத்துக் கொண்ட படத்தையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் சூர்யா.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: