Sarpatta Parambarai: ’சார்பட்டா பரம்பரை குழுவினரின் உழைப்பு ஆச்சரியப்பட வைக்கிறது’ - சூர்யா வாழ்த்து

சூர்யா

கபிலன், ரங்கன் வாத்தியார், வேம்புலி என முன்னணி கதாபாத்திரங்கள் மட்டுமின்றி டான்சிங் ரோஸ், கெவின் டாடி என துணை கதாபாத்திரங்களும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளனர்.

  • Share this:
    நடிகர் சூர்யா சார்பட்டா பரம்பரை படத்தில் இதுவரை சொல்லப்படாத கதை சொல்லப்பட்டிருப்பதாக நடிகர் சூர்யா, படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

    ரஜினியின் ’காலா’ படத்திற்குப் பிறகு இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் படம் ‘சார்பட்டா பரம்பரை’. ஆர்யா ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படத்தில், துஷாரா விஜயன், கலையரசன், பசுபதி மற்றும் சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 1970-களில் பிற்பகுதியில் நடக்கும் கதையான சார்பட்டா படம், குத்துச் சண்டையை மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கடந்த வாரம் அமேசான் பிரைமில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பிரபலங்களும், ரசிகர்களும் சார்பட்டா பரம்பரை படத்தைப் பார்த்து விட்டு, இயக்குநர் ரஞ்சித்தையும் நடிகர்களையும் புகழ்ந்து தள்ளுகிறார்கள். கபிலன், ரங்கன் வாத்தியார், வேம்புலி என முன்னணி கதாபாத்திரங்கள் மட்டுமின்றி டான்சிங் ரோஸ், கெவின் டாடி என துணை கதாபாத்திரங்களும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளனர்.



    இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா இந்தப் படத்தைப் பார்த்து விட்டு படக்குழுவினரை பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சார்ப்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதையைக் கண்முன் நிறுத்துகிறது… வடசென்னை மக்களின் வாழ்வியலை திரை அனுபவமாக மாற்ற இயக்குனரும், நடிகர்களும், ஒட்டுமொத்த படக்குழுவும் கொடுத்திருக்கும் உழைப்பு ஆச்சரியப்படவைக்கிறது!வாழ்த்துகள்!!” எனத் தெரிவித்திருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: