Home /News /entertainment /

ஜல்லிக்கட்டிற்காக பயிற்சி எடுக்கும் சூர்யா… வீடியோவை வெளியிட்டது வாடிவாசல் படக்குழு

ஜல்லிக்கட்டிற்காக பயிற்சி எடுக்கும் சூர்யா… வீடியோவை வெளியிட்டது வாடிவாசல் படக்குழு

வாடிவாசல் சூர்யா

வாடிவாசல் சூர்யா

Vaadivaasal Video : சூர்யாவின் பிறந்த நாளையொட்டி, படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வெளியிட்டுள்ள இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    வாடிவாசல் படத்தில் மாடு பிடி வீரராக சூர்யா நடித்து வரும் நிலையில், ஜல்லிக்கட்டிற்காக அவர் பயிற்சி எடுக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

    சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்திற்கு மொத்தம் 5 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த படம் மற்றும் சிறந்த பின்னணி இசைஆகிய பிரிவுகளுக்காக சூரரைப் போற்று படத்திற்கு தேசிய விருது அளிக்கப்படவுள்ளது.

    இதையொட்டி சூர்யாவுக்கு பல்வேறு திரை பிரபலங்கள் வாழ்த்து கூறியுள்ளார்கள். தம்பி சூர்யா என அழைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



    இந்நிலையில் வாடிவாசல் படத்திற்காக சூர்யா காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுடன் பயிற்சி எடுக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.



    சூர்யாவின் பிறந்த நாளையொட்டி, படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வெளியிட்டுள்ள இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    வாடிவாசல் படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார். செல்லப்பா எழுதிய நாவலின் அடிப்படையில் வாடிவாசல் திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

    இந்த படத்தில் சூர்யாவுடன் இயக்குனர் அமீர் நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மிகப் பெரும் பொருட் செலவில், வாடிவாசல் படத்தை பிரமாண்டமாக உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Suriya

    அடுத்த செய்தி