ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

5 வேடத்தில் நடிக்கும் சூர்யா.? வேற லெவலில் உருவாகும் சூர்யாவின் 42வது படம்!

5 வேடத்தில் நடிக்கும் சூர்யா.? வேற லெவலில் உருவாகும் சூர்யாவின் 42வது படம்!

சூர்யா

சூர்யா

நடிப்பினால் தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட நடிகர் சூர்யா

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சூர்யா 42வது படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார் .இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ளது.படம் இரண்டு பாகங்களால் உருவாக்கபடுகிறது. வரலாற்று கதையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு 160 நாட்கள் முதல் கட்டமாக நடை பெற்றது.

  இந்த படத்தில் சூர்யா, காட்டார், முக்காட்டார், அரத்தார், மாண்டாங்கர், பெருமனத்தார் என ஐந்து கேரக்டர்களில் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதாணி நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.10 மொழிகளில் தயாராக முடிவு செய்து உள்ளார் பட குழுவினர்.

  சூர்யா

  நடிப்பினால் தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட நடிகர் சூர்யா

  கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த காக்க காக்க திரைப்படம் சூர்யாவின் வர்த்தக எல்லைகளை விரிவடைய வைத்தது. வர்த்தக ரீதியாக தனக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கிக் கொண்டாலும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப் படங்களையும், நடிக்க வாய்ப்பு இருக்கும் கதாபாத்திரங்களையும் தேடித் தேடி நடிக்கத் தொடங்கினார் சூர்யா.

  வாரணம் ஆயிரம், அயன் உள்ளிட்ட திரைப்படங்களில் சிக்ஸ் பேக் உடல் தோற்றத்திற்கு தன்னை மெருகேற்றி சூர்யா வெளிப்படுத்திய கடின உழைப்பு, ரசிகர்கள் பலருக்கும் தங்களையும் உறுதிப்படுத்தக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

  தனது 25ஆவது திரைப்படமான சிங்கத்தில் நடித்த சூர்யா, தொடர்ச்சியாக சிங்கம் திரைப்படத்தின் அடுத்த இரண்டு பாகங்களிலும் நடித்து தனது வர்த்தக எல்லைகளை மேலும் விரிவுபடுத்திக் கொண்டார். திரைப்படம் கடந்து பொது வாழ்விலும் அதிகம் ஆர்வம் கொண்ட சூர்யா 2008ஆம் ஆண்டு அகரம் என்ற அறக்கட்டளை துவங்கி அதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் கல்வி பெற உதவி புரிந்து வருகிறார்.

  Read More: நேரில் 20000 ரசிகர்கள்.. லைவில் குவிந்த கூட்டம்.. சென்னையில் மாஸ் காட்டிய அனிருத்!

  தேசிய திரைப்பட விருதுகள் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் மொத்தம் 5 விருதுகளை வென்றது. இந்த திரைப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருந்தார்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Actor Suriya