Home /News /entertainment /

Suriya: ’சட்டம் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல’ - ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு குறித்து சூர்யா ட்வீட்

Suriya: ’சட்டம் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல’ - ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு குறித்து சூர்யா ட்வீட்

சூர்யா

சூர்யா

“சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காக, அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல"

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    “சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காக, அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல” என ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு 2021 குறித்து நடிகர் சூர்யா ட்வீட் செய்துள்ளார்.

    கடந்த 2019-ஆம் ஆண்டும் பிப்ரவரி 12-ஆம் தேதி மாநிலங்களவையில் ஒளிப்பதிவு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் 2021-ல் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

    இதனையடுத்து ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021-ஐ பொதுமக்கள் கருத்து மற்றும் பார்வைக்காக இன்று வரை நேரம் ஒதுக்கியது மத்திய அரசு. இந்நிலையில் இந்த சட்டத்திருத்தம் படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தலாக மாறிவிடும் என சினிமா துறையை சார்ந்த பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் ஒளிப்பதிவு வரைவு மசோதாவுக்கு நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காக, அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல. இன்று தான் கடைசி நாள். உங்கள் ஆட்சேபணையைத் தெரிவியுங்கள்” என்று பதிவிட்டு, இந்த மசோதா குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான இணையதள பக்கத்தை பகிர்ந்துள்ளார். தவிர நடிகர் கமல் ஹாசனும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Suriya

    அடுத்த செய்தி