நடிகர் சூர்யா சிவா இயக்கத்தில் நடிக்கிறார் என்ற செய்தி சில நாட்களாக திரையுலகில் உலா வருகிறது. இதனை சூர்யாவும் உறுதி செய்துள்ளார்.
சூர்யா நடித்திருக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் இந்தப்படம், பாண்டிராஜின் வழக்கமான திரைப்படங்களைப் போல கிராமத்துப் பின்னணியில் தயாராகியுள்ளது. கூடுதலாக ஆக்ஷன் காட்சிகளையும் அதிக அளவில் கதையில் இணைத்துள்ளார்.
இதையும் படிங்க.. சின்னத்திரை மீரா ஜாஸ்மின்.. யாரடி நீ மோகினி புகழ் நக்ஷத்ரா சொன்ன விஷயம்!
பொள்ளாச்சி
பாலியல் சம்பவம் படத்தில் இடம்பெற்றுள்ளதாக ஒரு தகவலும் உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யா பாலா இயக்கும் படத்தில் நடிக்கிறார். நந்தா, பிதாமகன் படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக பாலா சூர்யா கூட்டணி அமைகிறது. ரசிகர்கள் இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இதையடுத்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்கிறார்.
இதையும் படிங்க.. ஏன் இப்படி செஞ்சீங்க? பிக் பாஸ் பாவ்னியை கேள்வி கேட்கும் ரசிகர்கள்!
சி சு செல்லப்பா எழுதிய
வாடிவாசல் நாவலை தழுவி இந்தப் படம் எடுக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக சூர்யா தெரிவித்துள்ளார். அத்துடன் சூரரைப்போற்று திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்திலும் படம் நடிக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்குப் பிறகு சூர்யா யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற குழப்பம் நீடித்து வந்த நிலையில், சூர்யாவே அடுத்து பாலா இயக்கத்தில் நடிப்பதாக கூறி குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பாலா, வெற்றிமாறன், சிறுத்தை சிவா என்ற வரிசையில் சூர்யா படங்களில் நடிக்க இருக்கிறார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.