இன்ஸ்டாகிராமில் இணைந்தார் நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் இணைந்தார் நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா
  • Share this:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, அகரம் அறக்கட்டளையைத் தொடங்கி அதன் மூலம் ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி வழங்கி வருகிறார். இன்று தனது 45-வது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

மேலும் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த சூரரைப்போற்று படத்தின் காட்டுப் பயலே பாடலின் ஒரு நிமிட வீடியோ மற்றும் வாடிவாசல் படத்தின் சிறப்பு போஸ்டரும் வெளியிடப்பட்டிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் நடிகர் சூர்யா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார். அவரது கணக்கை இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். நடிகர் கார்த்தி, சகோதரி பிருந்தா, 2டி நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தின் இயக்குநர் ராஜசேகர பாண்டியன் என நான்கு இன்ஸ்டாகிராம் கணக்குகளை சூர்யா பின் தொடர்கிறார்.

 
View this post on Instagram
 

Happy to be here and meet you all. Let's spread love and positivity!! #Staysafe #LoveUall


A post shared by Suriya Sivakumar (@actorsuriya) on


மேலும் படிக்க:Happy Birthday Suriya | சூர்யாவின் சினிமா பயணம்

தனது இன்ஸ்டாகிராம் பதிவில், அனைவரையும் இங்கு சந்திப்பதில் மகிழ்ச்சி. அன்பையும் நேர்மறை எண்ணங்களையும் பரப்புவோம் என்று நடிகர் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
First published: July 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading