• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஜெய்பீம் உருவானது எப்படி? உண்மை கதையின் பின்னணி

ஜெய்பீம் உருவானது எப்படி? உண்மை கதையின் பின்னணி

ஜெய் பீம்

ஜெய் பீம்

பழங்குடியினருக்கு எதிரான வன்முறையை பேசும் படம் என விளம்பரப்படுத்தப்பட்ட சூர்யாவின் ஜெய்பீம் ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில், படத்தின் மையக் கருவான கடலூர் சம்பவம் என்ன என்பதை பார்க்கலாம்.

  • Share this:
    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் ஒன்றியத்தில் உள்ளது முதனை கிராமம். இங்கு குரும்பர் எனும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 4 குடும்பங்கள் வசித்து வந்தன. இவர்கள் 1993-ம் ஆண்டு நெல் அறுவடைப் பணிக்காக பக்கத்து கிராமங்களுக்கு சென்று வந்த நிலையில், கோபாலபுரத்தில் ஒரு வீட்டில் 40 சவரன் நகை காணாமல் போனது. இதுகுறித்து விசாரிப்பதற்காக முதனை கிராமத்திற்கு வந்த போலீசார், அங்கிருந்த மக்களை மிரட்டியுள்ளனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கோவிந்தன் இதில் தலையிட்டு, பழங்குடியின தலைவரான ராஜாகண்ணுவை போலீசில் ஒப்படைப்பதாக கூறியதால் காவலர்கள் திரும்பிச் சென்றனர். ராஜாகண்ணுவை கைது செய்த போலீசார், நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கினர். காவல்நிலையம் சென்ற ராஜாகண்ணுவின் மனைவி இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரை அங்கிருந்து மிரட்டி போலீசார் அனுப்பிய நிலையில், மறுநாள் ராஜாகண்ணு தப்பித்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இந்த தகவலை தோழர் கோவிந்தனிடம் மக்கள் தெரிவிக்க, அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களை ஒன்றிணைத்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினார். ஆனாலும் ராஜாகண்ணுவை கண்டுபிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சென்னையில் இருந்த வழக்கறிஞர் கே.சந்துருவின் உதவியை கோவிந்தன் நாடினார்.

    சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், 3 ஆண்டுகள் கழித்து 1996-ம் ஆண்டு இடைக்கால தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 2 லட்சத்து 65 ஆயிரம் உதவித் தொகையும், 3 சென்ட் பட்டா நிலமும் வழங்க உத்தரவிடப்பட்டு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.

    Also Read  :  சூர்யாவுக்கு மிக முக்கியமான படம் - பாராட்டுகளை குவிக்கும் ஜெய் பீம்!

    ஜெயங்கொண்டம் அடுத்த மீன்சுருட்டியில் ராஜாகண்ணுவின் உடல் வீசப்பட்டதாக சிபிசிஐடி போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர். இதனையடுத்து ராஜாகண்ணு காணாமல் போன வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. பொய் சாட்சி கூறிய மருத்துவர் ராமச்சந்திரன், ஓய்வு பெற்ற டிஎஸ்பி, ஆய்வாளர் மற்றும் காவல் நிலையத்தில் இருந்த உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 12 பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அரசு வழக்கறிஞராக சிதம்பரத்தைச் சேர்ந்த கே.வெங்கட்ராமனை நியமிக்க வேண்டும் என்ற தோழர் கோவிந்தனின் கோரிக்கையையும் உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. விசாரணை விருத்தாசலம் விரைவு நீதிமன்றத்திற்கும் மாற்றப்பட்டது. 13 ஆண்டுகளுக்குப் பின்பு வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில், 5 காவலர்களுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மருத்துவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணைக்கு பல்வேறு உதவிகளை செய்த தோழர் கோவிந்தனுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதுடன், பணத்தாசை காட்டப்பட்ட போதும் தொடர்ந்து நியாயத்தின் பக்கம் நின்றார். இந்த வழக்கிற்காக தனது திருமணத்தைக் கூட நிறுத்தி வைத்த அவர், 13 ஆண்டுகள் கழித்து 39-வது வயதில்தான் திருமணமே செய்துகொண்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: