Home /News /entertainment /

அமெரிக்காவிலிருந்து இன்று சென்னை திரும்புகிறார் சூர்யா

அமெரிக்காவிலிருந்து இன்று சென்னை திரும்புகிறார் சூர்யா

சூர்யா

சூர்யா

நடிகர் சூர்யா வணங்கான் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றார்.  அங்கு ஜோதிகா, தியா மற்றும் தேவ் ஆகியோருடன் விடுமுறை நேரத்தை செலவிட்டார்.

  • News18
  • Last Updated :
அமெரிக்கா சென்று இருந்த நடிகர் சூர்யா இன்று மாலை சென்னை திரும்புகிறார்.

நடிகர் சூர்யா வணங்கான் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றார்.  அங்கு ஜோதிகா, தியா மற்றும் தேவ் ஆகியோருடன் விடுமுறை நேரத்தை செலவிட்டார்.

இந்த நிலையில் அவர் தயாரித்து நடித்த சூரரைப் போற்று திரைப்படத்திற்கு 5 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது.  குறிப்பாக நடிகர் சூர்யா சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  அந்த அறிவிப்பு வெளியாகும் போதும் அவர் அமெரிக்காவில் இருந்தார்.



Also read... அந்த கண்ண பாத்தாக்கா லவ்வு தானா தோனாதா... மாளவிகா மோகனன் போட்டோஸ்

இந்த நிலையில் நேற்று முன்தினம் மும்பை வந்த சூர்யா, இன்று மாலை சென்னை திரும்புகிறார். இதன் பின் சிவா இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார். அதற்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Suriya

அடுத்த செய்தி