ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சாய்பல்லவி திரைப்படத்தை வெளியிடும் சூர்யா

சாய்பல்லவி திரைப்படத்தை வெளியிடும் சூர்யா

சாய்பல்லவி, ஜோதிகா, சூர்யா உடன் படக்குழுவினர்

சாய்பல்லவி, ஜோதிகா, சூர்யா உடன் படக்குழுவினர்

சாய்பல்லவி நடித்துள்ள கார்கி திரைப்படத்தை தமிழகத்தில் நடிகர் சூர்யா தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலமாக வெளியிடுகிறார். 

  • News18
  • 1 minute read
  • Last Updated :

சாய்பல்லவி நடிப்பில் உருவாகியிருக்கும் கார்கி திரைப்படத்தை நடிகர் சூர்யா தமிழகத்தில் வெளியிடுகிறார்.

பிரேமம் திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை சாய் பல்லவி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.  அவரது நடிப்பில் தற்போது கார்கி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த திரைப்படத்தை நிவின்பாலி நடிப்பில் வெளியான ரிச்சி திரைப்படத்தின் இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். பெண் கதாபாத்திரத்தை சுற்றி நடக்கும் ஒரு சம்பவத்தை மையமாகக் கொண்டு கார்கி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் - தெலுங்கு - கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாகியிருக்கும் கார்கி திரைப்படத்தை தமிழகத்தில் நடிகர் சூர்யா தன்னுடைய 2டி தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிடுகிறார்.  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சாய்பல்லவி இதற்கு முன்பு, ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தியா என்ற  திரைப்படத்தில் நாயகியை மையமாகக் கொண்ட கதையை தேர்வு செய்து நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது கார்கி திரைப்படத்தில் தன்னை முன்னிலைப்படுத்தும் கதையில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read... கீர்த்தி சுரேஷ் கால்ஷீட் கொடுத்தால் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் - உதயநிதி

இந்த திரைப்படத்திற்கு 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா  இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் நாயகி சாய்பல்லவியும், படத்தை வெளியிடும் சூர்யாவும் என்.ஜி.கேஎன்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த நிலையில் சாய் பல்லவி நடித்துள்ள இப்படத்தை நடிகர் சூர்யா தற்போது வெளியிடுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Surya, Actress sai pallavi