ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வணங்கான் படத்தில் இருந்து விலகிய சூர்யா.. அறிக்கை வெளியிட்டு விவரம் சொன்ன இயக்குனர் பாலா!

வணங்கான் படத்தில் இருந்து விலகிய சூர்யா.. அறிக்கை வெளியிட்டு விவரம் சொன்ன இயக்குனர் பாலா!

வணங்கான் ஷூட்டிங்கின்போது பாலா, சூர்யா.

வணங்கான் ஷூட்டிங்கின்போது பாலா, சூர்யா.

Suriya Bala Vanangaan : என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்து விடக்கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது. – பாலா

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு சூர்யா மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

இதுதொடர்பாக படத்தின் இயக்குனர் பாலா அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

வணக்கம். என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.

என் மீதும், இந்த கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும், மதிப்பும், நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்து விடக்கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.

கவனம் ஈர்க்கும் துணிவு படத்தின் புதிய ஸ்டில்கள்… சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங்

எனவே வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவு எடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம் தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது.

நந்தாவில் நான் பார்த்த சூர்யா பிதாமகனில் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம் மற்றபடி வணங்கான் பணிகள் தொடரும் என்று கூறியுள்ளார்.

WATCH – விஜய்யின் வாரிசு படத்திலிருந்து ‘தீ தளபதி’ பாடல்

வணங்கான் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. வணங்கான படப்பணிகள் தொடரும் என பாலா கூறியிருப்பதால் அவருக்கு பதிலாக வேறொரு நடிகர் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

First published:

Tags: Actor Suriya, Director bala