சூரரைப் போற்று: சூர்யாவின் நடிப்பை வியந்து பாராட்டிய மும்பை தயாரிப்பாளர்!

news18
Updated: April 16, 2019, 7:33 PM IST
சூரரைப் போற்று: சூர்யாவின் நடிப்பை வியந்து பாராட்டிய மும்பை தயாரிப்பாளர்!
குனித் மோங்கா| சூர்யா
news18
Updated: April 16, 2019, 7:33 PM IST
நமது நாட்டில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்கிறார் என்று குனித் மோங்கா பாராட்டியுள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே, கே.வி. ஆனந்த் இயக்கத்தில் காப்பான் ஆகிய இரண்டு படங்களைத் தொடர்ந்து இறுதிச்சுற்று பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.

இந்தப் படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தோடு இணைந்து குனித் மோங்காவும் தயாரிக்கிறார். குனித் மோங்காவிடம் இந்தியாவின் முதல் பட்ஜெட் விமான பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்திய புத்தகத்தின் உரிமை உள்ளது. ஜி.ஆர்.கோபிநாத் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.இந்நிலையில் படம் குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் படத்தின் இணை தயாரிப்பாளர் குனித் மோங்கா, “தமிழ் சினிமாவில் எங்களது பயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். சூரரைப் போற்று படத்தில் சூர்யாவைத் தவிர வேறு யாரும் நடிக்க முடியாது. நமது நாட்டின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்கிறார். அவர் தேசிய சின்னமாவார்” என்று கூறியுள்ளார்.

நடிகர் சூர்யா கூறுகையில், “திறமைவாய்ந்த படைப்பாளிகள் ஒரே அணியில் இணைந்திருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. படம் வேற லெவலில் இருக்கும் ” என்றார்.

என்.ஜி.கே, காப்பான் இரண்டு படத்திலும் அதிரடி அரசியல் பேசும் சூர்யா!


சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...