Home /News /entertainment /

சூர்யா 42 படத்தின் கதை இதுதானா? அவரே வெளியிட்ட தகவல்

சூர்யா 42 படத்தின் கதை இதுதானா? அவரே வெளியிட்ட தகவல்

சூர்யா

சூர்யா

விருமன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது சூர்யா பேசியிருந்தார். தற்போது அந்த வீடியோ சூர்யா ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

  • News18 India
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் வெளிவந்துள்ள நிலையில் படத்தின் கதை குறித்து சூர்யாவே சொன்ன தகவல் ஒன்று வைரலாகியுள்ளது.

    சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 42-ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சூர்யாவிற்கு ஜோடியாக இந்தி சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வரும் திஷா பதானி இடம்பெற்றுள்ளார்.

    இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகி மிகப் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. போஸ்டரில் இடம்பெற்றுள்ள பிரமாண்ட காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

    பா. ரஞ்சித் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தின் அப்டேட்…

    இந்த மோஷன் போஸ்டரை பார்க்கும்போது இந்த படம் பீரியட் மூவியாக உருவாகும் என்று தெரிகிறது.



    இந்நிலையில் எழுத்தாளரும் மதுரை மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சு வெங்கடேசன் எழுதியுள்ள வேள்பாரி நாவலை அடிப்படையாக கொண்டு, சூர்யாவின் 42-ஆவது படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.



    இதுகுறித்து விருமன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது சூர்யா பேசியிருந்தார். தற்போது அந்த வீடியோ சூர்யா ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    நாவலை மையமாகக் கொண்டு படங்களை உருவாக்குவது என்பது தமிழ் சினிமாவில் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. வெற்றிமாறன் இயக்கிய அசுரன் தற்போது உருவாகி வரும் விடுதலை, வாடிவாசல் மற்றும் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் நாவலை மையமாகக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Suriya

    அடுத்த செய்தி