Home /News /entertainment /

குடும்பத்தில் பெண்களை முன்னிறுத்தினால் வாழ்க்கை அழகாக இருக்கும் - சூர்யா!

குடும்பத்தில் பெண்களை முன்னிறுத்தினால் வாழ்க்கை அழகாக இருக்கும் - சூர்யா!

கார்தி மற்றும் சூர்யா

கார்தி மற்றும் சூர்யா

விருமன் திரைப்படதின் வெற்றியை படக்குழுவினர் தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாடினர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
குடும்பத்தின் பெண்களை முன்னிறுத்தி நம் வாழ்க்கையை பார்த்தால், அது இன்னும் அழகாக இருக்கும் என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் சூர்யா தயாரிப்பில் வெளியான விருமன் திரைப்படம் 5 நாட்களில் 35 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதையடுத்து இந்த வெற்றியை விருமன் படக்குழுவினர் தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாட சூர்யா ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிகழ்வில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், கருணாஸ், அதிதி உள்ளிட்ட நடிகர்கள் கலந்துகொண்டனர். அதேபோல் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் செல்வகுமார் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். விருமன் வெற்றி விழாவில் கலந்துகொண்டவர்கள் கார்த்தி மற்றும் அதிதி தலைமையில் அணியாக பிரிந்து விளையாடி மகிழ்ந்தனர்.



இந்த நிகழ்வின் இறுதியில் பேசிய நடிகர் கார்த்தி, விருமன் படம் கிராம புறங்களில்தான் வெற்றியடையும் என்று கூறினார்கள். ஆனால் சென்னையிலும் டிக்கெட் கிடைக்காத நிலை இருந்தது, இந்த வெற்றி மகிழ்ச்சியை கொடுக்கிறது என கூறினார்.



இவரை தொடர்ந்து பேசிய சூர்யா, விருமன் படம் கொரோனா காலத்தில், பல கட்டுபாடுகளுடன் நடைபெற்றது. படக்குழுவினர் தங்கள் வீடுகளுக்கே செல்ல முடியாமல் இருந்தது என கூறினார்.

Also read... பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் முதல்வர்!

மேலும் எங்களை மேலே உயர்த்துவிட எங்களுக்கு பின்னால் ஒரு பெரிய பலம் உள்ளது. அவர்கள்தான் வீட்டில் இருக்கும் பெண்கள். குடும்பத்தில் உள்ள பெண்கள் நமக்காக பல  தியாகங்களை செய்கின்றனர். அவர்களை முன்னிறுத்தி நம் வாழ்க்கையை பார்த்தால் அது இன்னும் அழகாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

விருமன் படத்தை தமிழகத்தில் வெளியிட்ட சக்திவேல் பேசுகையில், இதுவரை 35 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக பெருமிதம் அடைந்தார். அத்துடன் இயக்குனர் முத்தையாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்து  கவுரவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Karthi, Actor Suriya

அடுத்த செய்தி