முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வெறித்தனமான ஜிம் வொர்க் அவுட்டில் சூர்யா... வீடியோ செம வைரல்

வெறித்தனமான ஜிம் வொர்க் அவுட்டில் சூர்யா... வீடியோ செம வைரல்

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா தன்னுடைய 42வது படத்திற்காக கடும் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சிறுத்தை சிவா இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார். அது அவரின் 42 ஆவது திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக  எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் வரலாற்று பின்னணியில் இந்த திரைப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமை சுமார் 110 கோடிக்கு அதிகமான தொகைக்கு விற்பனையாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. சூர்யா திரைப்படத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு ஓடிடி வியாபாரம் என்பதால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

சூர்யா 42 படத்திற்கான முக்கிய காட்சிகளை சிவா தற்போது படமாக்கி வருகிறார்.  இந்த நிலையில் நடிகர் சூர்யா தன்னுடைய உடல் அமைப்பை அதற்கேற்ற வகையில் மாற்ற தீவிரமான உடற்பயிற்சி செய்து வருகிறார். குறிப்பாக படத்தில் இடம்பெறும் வரலாற்று பகுதிக்கான படப்பிடிப்பு தற்போது நடைபெறுவதாக கூறப்படுகிறது.
 
View this post on Instagram

 

A post shared by Rajsekar Pandian (@rajsekarpandian)அதற்காக தன்னுடைய உடல் அமைப்பை கடுமையான உடற்பயிற்சி மூலம் மாற்றி வருகிறார் என தெரிவிக்கின்றனர். அதற்கான வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

சூர்யா 42 திரைப்படத்திற்கான படப்பிடிப்பு சென்னை கோவா உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகிறது. ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி கதாநாயகி நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

First published:

Tags: Actor Suriya