ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அப்டேட்… Suriya 42 ஃபர்ஸ்ட் லுக் விவரம்!

சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அப்டேட்… Suriya 42 ஃபர்ஸ்ட் லுக் விவரம்!

சூர்யாவின் சமீபத்திய ஃபோட்டோஸ்

சூர்யாவின் சமீபத்திய ஃபோட்டோஸ்

சூர்யா 42 பீரியட் படமா அல்லது நிகழ்காலத்தில் நடக்கும் ஆக்சன் படமா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளார்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிபார்க்கும் அவரது 42ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற தகவல்கள் கசிந்துள்ளது.

    சூரரைப் போற்று , ஜெய்பீம் படங்களைத் தொடர்ந்து சூர்யா கேமியோ ரோலில் இடம்பெற்ற விக்ரம் திரைப்படம் மெகா ஹிட்டானது. இந்த படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் அதிகம் பேசப்பட்டது. எதற்கும் துணிந்தவன் படம் ஹிட்டான நிலையில், சூர்யா தற்போது அவரது 42ஆவது படத்தில் நடித்து வருகிறார்.

    இந்த படத்தை வீரம், விவேகம், விஸ்வாசம், அண்ணாத்த படங்களைக் கொடுத்த சிறுத்தை சிவா இயக்குகிறார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் அறிவிப்பு மோஷன் போஸ்டர் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

    மிகப் பெரிய சந்தோஷத்தில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை ஜோடி ராம் - ஜானு!

    சூர்யா 42 படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட்டின் முன்னணி நடிகை திஷா பதானி இடம்பெற்றுள்ளார்.

    ' isDesktop="true" id="828853" youtubeid="SPKfzhJBmzA" category="cinema">

    இந்த நிலையில், சூர்யா42 படத்தின் ஃபர்ஸ் லுக் மற்றும் டைட்டில் அறிவிப்பு வரும் கிறிஸ்மஸ் அல்லது பொங்கலையொட்டி வெளியாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. தற்போது, இந்த படத்தின் ஷூட்டிங் கோவாவில் நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து சென்னை, பாண்டிச்சேரியிலும் பின்னர் மீண்டும் கோவாவிலும் படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளது. சில காட்சிகளுக்காக வெளிநாடுகளுக்கு படக்குழு செல்ல திட்டமிட்டுள்ளது. இந்தப் படம் பீரியட் படமா அல்லது நிகழ்காலத்தில் நடக்கும் ஆக்சன் படமா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளார்கள்.

    காதல் மனைவி நயன்தாராவுக்கு பிரியாணி பார்ட்டி கொடுத்த விக்னேஷ் சிவன்!

    இந்த படத்தை தவிர்த்து பாலா இயக்கத்தில் வணங்கான், வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் படங்களில் சூர்யா நடிக்கவுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரும்புக் கை மாயாவி என்ற படத்தில் சூர்யா நடிப்பார் என்றும் பேசப்படுகிறது.

    Published by:Musthak
    First published:

    Tags: Actor Suriya