இந்தி சினிமாவில் தயாரிப்பாளராக நடிகர் சூர்யா அடியெடுத்து வைத்துள்ளார். அவரது 2டி என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் சார்பாக, தமிழில் மெகா ஹிட்டான சூரரைப் போற்று இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது.
கோலிவுட்டின் முன்னணி ஹீரோவாக இருக்கும் சூர்யா, தனது 2டி தயாரிப்பு நிறுவனத்தை 2013-ல் தொடங்கினார். 2டி பேனரில் வெளிவந்த படங்களில் பசங்க 2, 24, கடைக்குட்டி சிங்கம் சூரரைப் போற்று, ஜெய் பீம் படங்கள் கவனத்தை ஈர்த்தன.
தற்போது கார்த்தி நடித்து வரும் விருமன் படத்தை 2டி நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் தமிழில் மெகா ஹிட்டான சூரரைப் போற்று திரைப்படம் இந்தியில் உருவாகிறது. இதனை முன்னணி இந்தி பட தயாரிப்பாளர் விக்ரம் மல்ஹோத்ராவுடன் இணைந்து சூர்யாவின்2டி நிறுவனம் தயாரிக்கிறது.
அக்சய் குமார், ராதிகா மதன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார்.
இதையும் படிங்க - புகையிலை விளம்பரத்தில் நடிக்க மறுத்த அல்லு அர்ஜுன்... பாராட்டி தள்ளிய அன்புமணி ராமதாஸ்!
இந்தியில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அக்சய் குமார் சூரரைப் போற்று ரீமேக்கில் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே ரஜினியின் 2.0 படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இந்நிலையில் சூரரைப் போற்று ரீமேக்கின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை.
இதையும் படிங்க - சமந்தாவின் பாய் பிரெண்டாக ஸ்ரீசாந்த்... ட்ரெண்டிங்கில் திப்பம் தப்பம் பாடல்!
சூரரைப் போற்று படத்தின் இந்த டப்பிங்கிற்கே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் இதன் ரீமேக் மெகா ஹிட் ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கும் சூழலில், 2டி தொடர்ந்து இந்தி படங்களையும் தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.