• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Jai Bhim: ’இதற்கு முன்பு இப்படியொரு அன்பை பார்த்ததில்லை’ - சூர்யா நெகிழ்ச்சி பதிவு!

Jai Bhim: ’இதற்கு முன்பு இப்படியொரு அன்பை பார்த்ததில்லை’ - சூர்யா நெகிழ்ச்சி பதிவு!

சூர்யா

சூர்யா

Jaibhim மீதான இந்த அன்பு அலாதியானது. இதற்கு முன் இப்படி ஒரு அன்பை பார்த்ததில்லை!

  • Share this:
    இந்தளவு அன்பை தான் இதற்கு முன்பு பார்த்ததில்லை என நடிகர் சூர்யா ட்விட்டரில் நெகிழ்ச்சியான பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார்.

    நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ளார். சூர்யாவின் 39-வது படமான இதில், பிரகாஷ் ராஜ், கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

    படத்தில் வில்லன் வீட்டில் அக்னி கும்ப காலண்டர் இருப்பது வன்னியர் சமூகத்தை குறிப்பிடுவது போல் இருப்பதாக சர்ச்சை எழுந்ததையடுத்து, அது சரிசெய்யப்பட்டது. அதோடு ஜெய் பீம் படத்தில் வில்லனாக நடித்திருந்த போலீஸ் கதாபாத்திரத்திற்கு குரு மூர்த்தி எனப் பெயரிடப்பட்டிருந்தது.

    இதையடுத்து வன்னியர் சங்க தலைவர் காடு வெட்டி குருவின் பெயர் குற்றவாளி கதாபாத்திரத்திற்கு வைக்கப்பட்டுள்ளதாக பிரச்னை கிளம்பியது. இந்த விவகாரம் தொடர்பாக பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், சூர்யாவுக்கு பல்வேறு கேள்விகள் கேட்டு அறிக்கை வெளியிட்டதுடன், தியேட்டர்களில் படம் திரையிடுவதை வன்னிய சமுதாயத்தினர் தடுத்து நிறுத்தும் சூழல் ஏற்படலாம் என்றும் தெரிவித்திருந்தார். அந்த அறிக்கைக்கு சூர்யாவும் விரிவான பதில் அளித்திருந்தார். ஆனாலும் 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வன்னியர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.



    இதையடுத்து சூர்யாவுக்கும், ஜெய் பீம் படக்குழுவினருக்கும் ரசிகர்களும், பிரபலங்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் சூர்யா, “Jaibhim மீதான இந்த அன்பு அலாதியானது. இதற்கு முன் இப்படி ஒரு அன்பை பார்த்ததில்லை! நீங்கள் அனைவரும் எங்களுக்கு அளித்த நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டிற்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. எங்களுடன் நின்றதற்கு மனமார்ந்த நன்றி" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: