• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இருளர் மாணவர்களின் கல்விக்காக முதல்வரிடம் ஒரு கோடி வழங்கிய சூர்யா!

இருளர் மாணவர்களின் கல்விக்காக முதல்வரிடம் ஒரு கோடி வழங்கிய சூர்யா!

முதல்வருடன் சூர்யா

முதல்வருடன் சூர்யா

Suriya: ஜெய் பீம் மூலம் திரைப்படங்களிலும் சமூக நீதி கருத்துகளை பேச ஆரம்பித்துள்ளார் சூர்யா.

  • Share this:
    நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் ஒரு கோடி ரூபாயை இருளர் மாணவர்களின் கல்விக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் அளித்துள்ளார்.

    சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் ஏழை மாணவர்களின் கல்விக்காக பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது. ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ஏற்றுக் கொள்வது அதில் முக்கியமானது. நீட், புதிய கல்விக் கொள்கை போன்ற மாணவர் நலனுக்கு எதிரான கல்வித் திட்டங்களை சமரசமின்றி சூர்யா எதிர்து வருகிறார். சமூக அக்கறையும், சமூக நீதியும் அவரது பேச்சில், செயலில் தொடர்ந்து இருந்து வருகிறது.

    ஜெய் பீம் மூலம் திரைப்படங்களிலும் சமூக நீதி கருத்துகளை சூர்யா பேச ஆரம்பித்துள்ளார். நாளை அவர் நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. ப்ரீவியூ காட்சியாக படத்தைப் பார்த்தவர்கள் சூர்யாவையும், இயக்குனரையும், படத்தையும் கொண்டாடி வருகின்றனர். இருளர் பழங்குடியினர் எதிர்கொண்ட சட்ட அடக்குமுறையையும், அவர்களுக்காக போராடி வென்ற வழக்கறிஞரையும் பேசும் திரைப்படம் இது.

    சமூக நீதி கருத்துகளை திரையில் பேசுவதுடன் நின்றுவிடாமல் இருளர் மாணவர்களின் கல்விக்காக முதல்வரிடம் 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் ஒரு கோடி ரூபாய் அளித்துள்ளார் சூர்யா. ஜெய் பீம் படத்தை 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்திருந்தது. இருளர் பழங்குடியினர் பிரச்சனையை பேசிய படம் என்பதால், அதில் கிடைத்த தொகையில் ஒரு பகுதியான ஒரு கோடியை அம்மக்களின் கல்விக்காக அளித்துள்ள சூர்யாவின் செயல் பாராட்டுக்குரியது.

    Actor Suriya donates Rs 1 crore to CM MK Stalin for Irular education, suriya 1 crore donation, actor suriya irular students, நடிகர் சூர்யா 1 கோடி நன்கொடை, இருளர் மாணவர்கள், Suriya Jai Bhim, suriya, actor suriya, suriya 2d entertainment, suriya movies, suriya jai bhim, jai bhim trailer, jai bhim movie, jai bhim amazon prime, jai bhim ott release,  சூர்யா, நடிகர் சூர்யா, சூர்யா 2டி எண்டெர்டெயின்மெண்ட், சூர்யா திரைப்படங்கள், ஜெய் பீம், ஜெய் பீம் ட்ரைலர், 2d entertainment movies
    முதல்வருடன் சூர்யா


    இருளர் பழங்குடியினர் நலனுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட பேராசிரியர் கல்யாணியும் இந்த நிகழ்வின் போது உடனிருந்தார் என்பது மேலும் மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கும் தருணம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: