இயக்குநர்கள் சங்கத்துக்கு சூர்யா ரூ.10 லட்சம் நன்கொடை!

news18
Updated: October 10, 2019, 7:13 PM IST
இயக்குநர்கள் சங்கத்துக்கு சூர்யா ரூ.10 லட்சம் நன்கொடை!
ஆர்.வி.உதயகுமாருடன் சூர்யா
news18
Updated: October 10, 2019, 7:13 PM IST
தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு நடிகர் சூர்யா ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் காப்பான். இந்தப் படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை அடுத்து சுதா கொங்கராவின் சூரரைப் போற்று படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.

சமீபகாலமாகவே தனது படங்களின் படப்பிடிப்பு நிறைவடையும் போது, அந்தப் படத்தில் பணியாற்றியவர்களுக்கு தங்கக் காசு வழங்கி கவுரவித்து வருவதை சில நட்சத்திரங்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். அதில் சூர்யாவும் ஒருவர்.


காப்பான் படத்தில் தன்னுடன் பணியாற்றியவர்களுக்கு தங்கக் காசு கொடுத்த கவுரவித்த நடிகர் சூர்யா, சூரரைப் போற்று படக்குழுவுக்கும் தங்கக் காசுகளை கொடுத்துள்ளார். ஆனால் இதை வெளியில் சொல்லக்கூடாது என்று சூர்யா தரப்பில் சொன்னதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இந்த மாத இறுதியில் தீபாவளி பண்டிகை வருவதையொட்டி, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க அறக்கட்டளைக்கும், இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்கள் நல நிதியாகவும் நடிகர் சூர்யா ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார். அதற்கான காசோலையை தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொது செயலாளர் ஆர்.வி.உதயகுமாரிடம் சூர்யா வழங்கியுள்ளார்.

வீடியோ பார்க்க: தமிழ் சினிமாவில் சாதி அரசியல்... அசுரன் படம் பற்றி வெற்றிமாறன் பேட்டி

Loading...

First published: October 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...