கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் தனது ரசிகர்கள் 250 பேருக்கு தலா 5000 ரூபாய் வங்கியில் செலுத்தியுள்ளார் நடிகர் சூர்யா.
சினிமா மட்டுமின்றி பல்வேறு சமூகப்பணிகளை செய்து வருபவர் நடிகர் சூர்யா. தனது அகரம் ஃபவுண்டேஷன் மூலம் ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளித்து வருகிறார். அதோடு தனது படங்களின் மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அவரது ’சூரரைப் போற்று’ பட வெளியீட்டுத் தொகையில் 5 கோடி ரூபாயை பொதுமக்களுக்கும், திரையுலகைச் சார்ந்தவர்களுக்கும், கொரோனா களத்தில் முன்னின்று பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கும் பகிர்ந்தளித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தற்போது கொரோனா 2-ம் அலை தீவிரமாக இருப்பதால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பலர் வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றனர். இதையடுத்து உதவி தேவைப்படுபவர்களுக்கு உணவு, மளிகை சாமான், பணம் என தங்களால் முடிந்த உதவிகளை பிரபலங்களும், பொதுமக்களும், தொண்டு நிறுவனங்களும் செய்து வருகின்றன.
இந்நிலையில் நடிகர் சூர்யா வருமானமின்றி கஷ்டப்படும் தனது ரசிகர்கள் 250 பேருக்கு தலா 5000 ரூபாயை வங்கியில் செலுத்தியதாக, தங்கள் மொபைலுக்கு வந்த குறுஞ்செய்தியை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Surya