ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சூர்யாவின் வணங்கான் படத்தில் இணையும் சூப்பர் ஹிட் படத்தின் இயக்குனர்… புதிய தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி

சூர்யாவின் வணங்கான் படத்தில் இணையும் சூப்பர் ஹிட் படத்தின் இயக்குனர்… புதிய தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி

வணங்கான் ஷூட்டிங்கின்போது பாலா, சூர்யா.

வணங்கான் ஷூட்டிங்கின்போது பாலா, சூர்யா.

கருத்து வேறுபாடு காரணமாக வணங்கான் படம் கைவிடப்பட்டதாக சமீபத்தில் தகவல்கள் பரவின. அவை உண்மை இல்லை என்று தற்போது தெரியவந்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகர் சூர்யா, இயக்குனர் பாலா கூட்டணியில் உருவாகி வரும் வணங்கான் படத்தின் கதை மாற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங் தொய்வை சந்தித்து வருவதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  சூர்யாவின் கெரியரில் இயக்குனர் பாலா உடனான கூட்டணி முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தின. காதல் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த சூர்யாவின் இமேஜை பாலாவின் நந்தா படம் அடியோடு மாற்றியது. இதன்பின்னர் தொடர்ந்து ஆக்சன் படங்களில் சூர்யா மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

  இதேபோன்று பிதாமகன் திரைப்படமும் சூர்யாவுக்கு நல்ல புகழை பெற்றுத் தந்தது. இதனால் சூர்யா – பாலா கூட்டணி அடுத்து எப்போது இணையும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்த நிலையில், இருவரும் வணங்கான் என்ற படத்தில் பணியாற்றி வருகின்றனர்.

  நடிகை சாக்‌ஷி அகர்வாலின் இன்ஸ்டாகிராம் க்ளிக்ஸ்..

  இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக, தெலுங்கில் ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகை கீர்த்தி ஷெட்டி இடம்பெற்றுள்ளார். கன்னியாகுமரி பகுதியில் இந்த படத்தின் ஷூட்டிங் 40 நாட்கள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், அதன்பின்னர் ஷூட்டிங்கில் எந்த டெவலப்பும் ஏற்படவில்லை.

  அதேநேரத்தில் சூர்யா வாடிவாசல், சிவாவுடனான 42ஆவது படங்களில் பிஸியாகிவிட்டார். இந்த சூழலில் வணங்கான் படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில், வணங்கான் படத்தின் கதையை சூர்யா நிராகரித்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதையடுத்து, அருவி படத்தின் இயக்குனர் அருண் பிரபு, பாலாவுடன் இணைந்து புதிய கதையை வணங்கான் படத்திற்காக உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

  இந்த வாரம் தியேட்டர், ஒடிடி இல் ரிலீஸ் ஆனா திரைப்படங்கள்..!

  புதிய கதை சூர்யாவுக்கு திருப்தி அளித்தால் அடுத்த ஆண்டே படத்தின் ஷூட்டிங் மீண்டும் ஆரம்பித்து விடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது சூர்யா சிவாவுடனான தனது 42 படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளார். இதன்பின்னர் வெற்றி மாறன் உடனான வாடிவாசல் திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Musthak
  First published:

  Tags: Actor Suriya