’மக்களின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்!’ - சூர்யா

சூர்யா - முதல்வர் மு.க.ஸ்டாலின்

சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவுக்குப் பிறகு முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு முதல்வராகிறவர் ஸ்டாலின் என்பதை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.

 • Share this:
  திமுக தலைவர் முக.ஸ்டாலின் முதல்வராக பதிவியேற்றிருக்கும் நிலையில், நடிகர் சூர்யா பொருள் பொதிந்த வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்துள்ளார்.

  நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இன்று திமுக தலைவர் கவர்னர் மாளிகையில் எளிமையாக நடந்த விழாவில் முதல்வராக பொறுப்பேற்றார். அவருடன் 33 அமைசர்களும் பதிவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இதனையொட்டி, நடிகர் சூர்யா முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  'முடியுமா நம்மால்?' என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம்...
  'முடித்தே தீருவோம்!' என்பது வெற்றிக்கான தொடக்கம்...
  - முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

  'முடித்தே தீர வேண்டிய' பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க, சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று 'மக்களின் முதல்வராக' பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

  சுவாசிப்பதற்கு உயிர் காற்றுகூட கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிற இந்த பேரிடர் காலத்தில், நீங்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. தங்கள் ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் தமிழகம் வளர்ச்சியடையும் என்று நம்புகிறோம். தங்களுக்கும், ஆற்றலும் அனுபவமும் நிறைந்த மாண்புமிகு தமிழக அமைச்சர் பெருமக்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகள்.

  தமிழகத்தின் உரிமைகளை மீட்க தமிழர்களின் ஒருமித்த குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும்.

  அன்புடன்
  சூர்யா”

  என தனது அறிக்கையில் சூர்யா கூறியுள்ளார்.

  இந்த அறிக்கையில் மக்களின் முதல்வர் என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம், சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவுக்குப் பிறகு முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு முதல்வராகிறவர் ஸ்டாலின் என்பதை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். ஓ.பன்னீர் செல்வம் ஜெயலலிதா சிறை சென்ற போதும், எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா இறந்த போதும் அவருக்கு பதிலாக முதல்வரானவர்கள் என்பதை, இதன் மூலம் சூர்யா கூட்டிக் காட்டியிருப்பதாக பலரும் குறிப்பிட்டுள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: