முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அடுத்தது வாடிவாசல் அல்ல பாலா படம் தான் - உறுதி செய்த சூர்யா!

அடுத்தது வாடிவாசல் அல்ல பாலா படம் தான் - உறுதி செய்த சூர்யா!

சூர்யா - பாலா

சூர்யா - பாலா

முதலில் தொடங்கப்பட இருப்பது வெற்றிமாறன் படமா அல்லது பாலா படமா என்ற குழப்பம் இருந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சூர்யாவின் 41-வது படம் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசலா அல்லது பாலா படமா என்ற குழப்பம் நீடித்து வந்த நிலையில் அடுத்து பாலா படம் தான் என்பதை உறுதி செய்திருக்கிறார் சூர்யா.

சூர்யாவுக்கு நந்தா படத்தின் மூலம் திருப்புமுனை ஏற்படுத்தித் தந்தவர் பாலா. அந்தப் படத்தில்தான் சூர்யா என்ற நடிகரை இந்த உலகம் அடையாளம் கண்டுகொண்டது. அதன்பிறகு பாலாவின் பிதாமகன் திரைப்படத்தில் சிறப்பான வேடம் ஒன்றில் சூர்யா நடித்தார். இவ்விரு படங்கள் தான் இன்றைய சூர்யா என்ற நடிகரை உருவாக்கியது எனலாம்.

சுமார் 18 வருடங்களுக்கு பிறகு சூர்யாவும் பாலாவும் இணைகிறார்கள். இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் சூர்யா நடிக்கிறார். இதனால் முதலில் தொடங்கப்பட இருப்பது வெற்றிமாறன் படமா அல்லது பாலா படமா என்ற குழப்பம் இருந்தது. ஆனால் பாலா படமே முதலில் தொடங்கப்படும் என கூறப்பட்டது.

Will Smith: ஆஸ்கர் மேடையில் சக நடிகரை கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித் - பின்னணி இதுதான்

இந்நிலையில் வாடிவாசல் படத்துக்கான டெஸ்ட் ஷூட் சென்னை புறநகரில் நடந்தது. இதில் சூர்யா கலந்துகொண்டார். இதனால் மீண்டும் சூர்யாவின் அடுத்த படம் வெற்றிமாறனின் வாடிவாசலா இல்லை பாலா படமா என்ற கேள்வி எழுந்தது. அதற்குரிய விடையை அளித்துள்ளார் சூர்யா.

Oscar 2022: சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்ற கோடா!

அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், எனது மென்டர் டைரக்டர் பாலா ஆக்சன் சொல்வதற்காக காத்திருக்கிறேன். 18 வருடங்களுக்கு பிறகு இது மகிழ்ச்சியான நாள். இந்த நேரத்தில் உங்களுடைய வாழ்த்துகள் தேவை என அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் தனது அடுத்தப் படம் பாலாவுடன் என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். சூர்யாவின் 41-வது திரைப்படமாக இது தயாராகிறது. ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். மேலதிகத் தகவல்களை விரைவில் எதிர்பார்க்கலாம்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Suriya, Director bala