நடிகர் சூர்யா தன்னுடைய ரசிகரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதில் பாண்டிச்சேரியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உடல்நலக் குறைவால் காலமானார்.
அவரின் மறைவுக்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்திருக்கிறார். அதில் என் மீது பேரன்பும் உரிமையும் கொண்ட தம்பி பாண்டிச்சேரி ராஜேந்திரன் உடல்நலக் குறைவால் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார். ஏற்க இயலாத அவரின் இழப்பு, மீளாத் துயரத்தில் ஆழ்த்துகிறது கூறியுள்ளார்.
இதையும் படிங்க - VIKRAM : பிரபலங்கள் பார்வையில் விக்ரம்.. ’பார்ட் 3 ’ வேண்டுமாம்!
அத்துடன் அவரின் குடும்பத்தினரின் துயரில் சகோதரனாய் பங்க் எடுக்கிறேன் எனவும் சூர்யா தெரிவித்திருக்கிறார்.
'நாயகன் மீண்டும் வர்றார்!' - கமல் ஹாசனின் நடிப்பில் நாம் கொண்டாடிய ஆக்ஷன் படங்கள்!
கடந்த வாரம் நாமக்கல் மாவட்ட சூர்யா ரசிகர் மன்ற செயலாளர் ஜெகதீஷ் மறைவுக்கு அவரின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் இந்த நிலையில் தற்போது பாண்டிச்சேரியில் ராஜேந்திரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இருக்கிறார் சூர்யா.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.