ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரோலெக்ஸ் எப்போ வரும்... நடிகர் சூர்யா கூறிய தகவல் - வைரலாகும் வீடியோ!

ரோலெக்ஸ் எப்போ வரும்... நடிகர் சூர்யா கூறிய தகவல் - வைரலாகும் வீடியோ!

சூர்யா

சூர்யா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 3-ம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

 • News18
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ரோலெக்ஸ் எப்போ வரும் என்ற ரசிகர்களின் கேள்விக்கு நடிகர் சூர்யா கூறிய பதில் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 3-ம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

  இவர்களுடன் சூர்யா, அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியமான துணை வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியின்போது சூர்யா படத்தில் இடம்பெறுவார் என்றும், இந்த காட்சி விக்ரம் படத்தின் அடுத்த பாகங்களுக்கு லீடாக அமையும் என்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். இதனால், படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது.

  இந்நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க அனிருத் இசையமைத்திருக்கும் பாடல்கள் அனைத்துமே செம ஹிட். மேலும் படம் வசூலிலும் நல்ல வேட்டை நடத்தியது.

  மேலும் கமல் நடித்த படங்களிலேயே மிக அதிகமான வசூலை விக்ரம் குவித்துள்ளது. தமிழ் நாட்டில் அதிக அளவுக்கு விக்ரம் படம் கலெக்சனை அள்ளியிருப்பதாக தகவல்கள் தெரிவித்தன.

  Also read... ரஜினி படத்தின் சாதனையை முறியடித்த பொன்னியின் செல்வன்!

  இந்நிலையில் நடிகர் சூர்யாவின் ரோலெக்ஸ் கதாப்பாத்திரம் க்ளைமேக்ஸில் இடம்பெற்று விக்ரம் படத்தின் அடுத்த பாகங்களுக்கு லீடாக அமைந்தது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இதன் காரணமாக சூர்யா எந்த விழாவிற்கு சென்றாலும் அங்கு ரோலெக்ஸ் கதாப்பாத்திரம் குறித்த ரசிகர்களின் கேள்விகள் அதிகமாக வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்து கொண்டார்.

  அப்போது மேடையில் அவரிடம் ரோலெக்ஸ் எப்போ வரும் என்று கேட்கப்பட்டது. அப்போது அதற்கு காலம் தான் பதில் சொல்லும் என்றும் அதற்கான நேரம் வரும் போது அதை பன்னிடலாம் என்றும் சூர்யா தெரிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Actor Suriya