மணிரத்னத்தின் வெப் சீரிஸில் நடிக்கிறார்களா சூர்யா, விஜய் சேதுபதி?

இயக்குநர் மணிரத்னம் வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மணிரத்னத்தின் வெப் சீரிஸில் நடிக்கிறார்களா சூர்யா, விஜய் சேதுபதி?
விஜய் சேதுபதி | சூர்யா
  • Share this:
‘நவரசா’ என்ற டைட்டிலில் இணைய தொடர் ஒன்றை இயக்குநர் மணிரத்னம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகவுள்ள இந்த வெப் சீரிஸை பல முன்னணி இயக்குநர்கள் இணைந்து இயக்க உள்ளார்கள்.

காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் என 9 நவரசங்களை 9 கதைகளாக மணிரத்னம், ஜெயேந்திரா, கே.வி.ஆனந்த், சுதா, சித்தார்த், அரவிந்த்சாமி, பிஜாய் நம்பியார், கெளதம் மேனன் மற்றும் கார்த்திக் நரேன் ஆகிய 9 இயக்குநர்கள் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதன்மூலம் அரவிந்த்சாமி, மற்றும் சித்தார்த் இயக்குநர்களாக அறிமுகமாகவுள்ளனர்.

இதில் இயக்குநர் ஜெயேந்திரா இயக்கவுள்ள கதையில் சூர்யாவை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடக்கிறது. பிஜாய் நம்பியார் கதையில் விஜய் சேதுபதியும், சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷும் நடிக்கவுள்ளனர். ஆனாலும் இதுகுறித்த முடிவு இன்னும் உறுதி செய்யப்படவில்லை என தெரிகிறது.

படிக்க: கூகுள் + ஜியோ கூட்டுத்தயாரிப்பில் குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள்

படிக்க: கொரோனாவில் இருந்து மெல்ல மீளும் சென்னை - குணமடைவோர் விகிதம் உயர்வு


இந்த வெப் சீரீஸை உருவாக்குவதன் மூலம் கிடைக்கும் தொகையில் ஒரு பகுதியை திரைப்பட தொழிலாளர்களுக்கு வழங்க இயக்குநர் மணிரத்னம் முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading