மீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் ஜோதிகா - இயக்குநர் யார் தெரியுமா?

மீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் ஜோதிகா - இயக்குநர் யார் தெரியுமா?

சூர்யாவுடன் ஜோதிகா

சூர்யா - ஜோதிகா மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Share this:
தமிழ் சினிமா ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற ஜோடியாக சூர்யா - ஜோதிகா வலம் வருகின்றனர். பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, பேரழகன், மாயாவி, காக்க காக்க உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த இந்த ஜோடி கடைசியாக ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் நடித்திருந்தனர். திரையில் ஜோடியாக நடித்த இவர்களுக்குள் காதல் மலர்ந்ததால் 2006-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்குப் பின்னர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா, தனது இரண்டு குழந்தைகளும் ஓரளவு வளர்ந்த பின்னர் 2015-ம் ஆண்டு இறுதியில் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வரும் ஜோதிகா மீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாக எப்போது நடிப்பார் என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் ‘சில்லுக் கருப்பட்டி’ பட இயக்குநர் ஹலிதா சமீம் இயக்கத்தில் மலையாள தயாரிப்பாளர் அஞ்சலி மேனன் தயாரிக்கும் புதிய படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இருவரது ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க: பிக்பாஸில் வைல்ட் கார்ட் என்ட்ரியா இல்ல குக்வித் கோமாளியா? - சுரேஷ் சக்ரவர்த்தி பதில்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சூர்யா. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் சூர்யா நெடுமாறன் ராஜாங்கம் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இத்திரைப்படம் நவம்பர் 12-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.



இத்திரைப்படத்தை அடுத்து வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் தனது 40-வது படம் ஆகிய இரண்டு படங்களில் கவனம் செலுத்த உள்ளார். விரைவில் ஹலிதா சமீம் இயக்கத்தில் சூர்யா - ஜோதிகா நடிக்க இருக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Sheik Hanifah
First published: