மறைந்த நடிகர் விவேக் உடலுக்கு சூர்யா, ஜோதிகா நேரில் அஞ்சலி

சூர்யா - ஜோதிகா

மறைந்த நடிகர் விவேக் உடலுக்கு நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா நேரில் அஞ்சலி செலுத்தினர்.

 • Share this:
  நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று காலை தனது குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருக்கும் போது திடீர் என மயங்கி விழுந்ததால், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

  நடிகர் விவேக்கின் உடல்நிலை மோசமானதால் எக்மோ கருவி உடன் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை குறித்து 24 மணி நேரம் கழித்தே கூறப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். இதை தொடர்ந்து அவரது உடல் மருத்துவமனையில் இருந்து விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது,

  நடிகர் விவேக்கின்  உடலுக்கு திரைபிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விவேக் இல்லம் இருக்கும் இடத்தில் 40-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். கொரோனா பரவல் காரணமாக முறையாக வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

  நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா ஆகியோர் விவேக் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் நாசர், சூரி, இமான் அண்ணாச்சி, கவுண்டமணி, நடிகை ஆர்த்தி, இந்துஜா உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
  Published by:Vijay R
  First published: