நடிகர் விஜய் குறித்த தனது பதிவுகள் தொடர்பான மீம்ஸ்களுக்கு நடிகர் சந்தீப் கிஷன் பதிலடி கொடுத்துள்ளார்.
சமூக வலைதளங்களில் பதிவிடும் பதிவுகள் உடனடியாகவோ அல்லது சிறிது காலத்திற்கு பிறகோ சர்ச்சையாவது பிரபலங்கள் வாழ்க்கையில் வாடிக்கையாகியிருக்கிறது. சில காலத்திற்கு முன்பு கேலி, கிண்டல் செய்தவரை நிகழ்காலத்தில் பாராட்டும் நிலை ஏற்படும். அப்போது பழைய பதிவுகள் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகும். அந்த வகையில் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கியவர் நடிகர் சந்தீப் கிஷன்.
'சுறா' படம் வெளியான போது, அந்தப் படத்தை கிண்டல் செய்து பதிவுகளை வெளியிட்டு இருந்தார் சந்தீப் கிஷன். அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து விஜய்யின் பிறந்த நாளுக்கு, அவரை புகழ்ந்து ட்வீட் செய்திருந்தார். இந்த இரண்டையும் முன்வைத்து தான் மீம்ஸ்களை உருவாக்கி வெளியிட்டுள்ளனர் நெட்டிசன்கள்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ட்விட்டரில், ”இதை நான் யாருக்கும் நிரூபிக்க வேண்டியதில்லை.. ஆனால் என்னுடைய வார்த்தைகளை நான்
மறுபரிசீலனை செய்ய ஒரு சில கணங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. இந்தப் பதிவை எடுத்து வைத்துக் கொண்டு என்னிடம் எப்போது வேண்டுமானால் கேளுங்கள். அப்போதும் நான் இந்த கருத்தில் தான் உறுதியாக இருப்பேன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
எனக்கு
விஜய் சாரை மிகவும் பிடிக்கும். அவர் பல கடினமான தருணங்களில் என்னை பலவழிகளில் ஊக்கப்படுத்தியுள்ளார். இதில் வெட்கப்பட ஏதுமில்லை. விஜய் சார் படங்களை ரசித்தே நான் வளர்ந்தேன். இடைப்பட்ட காலங்களில் ஒரு வழக்கமான சினிமா
ரசிகனாக தொலைந்து போனேன். ஆனால் இன்று கடந்த 10 ஆண்டுகளாக அவருடைய பயணம் எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்தது என்று பெருமையுடன் சொல்வேன். இன்று நான் அவருடைய மிகப்பெரிய ரசிகனாக இருக்கிறேன்" என விளக்கியுள்ளார் சந்தீப்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.