முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மீண்டும் நடிப்பில் ஆர்வம்: ஜெய்யுடன் இணையும் சுந்தர்.சி

மீண்டும் நடிப்பில் ஆர்வம்: ஜெய்யுடன் இணையும் சுந்தர்.சி

சுந்தர் சி

சுந்தர் சி

ஜெய்யுடன் இணைந்து மீண்டும் நடிப்பதற்கு தயாராகிறார் இயக்குநர் சுந்தர்.சி.

  • Last Updated :

மினிமம் கியாரண்டி இயக்குனராக இருந்து, நடிகரானவர் சுந்தர் சி. அவர் நடித்தப் படங்கள் தொடர்ந்து முதலுக்கு மோசம் செய்ய, இனிமேல் நடிப்பு இல்லை, இயக்கம் மட்டும்தான் என்று கலகலப்பு படத்தில் மீண்டும் இயக்குனரானார். மேக்கப் போட்ட முகம் அதை அவ்வளவு எளிதில் மறுப்பதில்லை. தான் இயக்கிய அரண்மனை உள்பட சில படங்களில் நடித்தவர் மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோவாக ஜெய் நடிக்க உள்ளார். படத்தை இயக்குகிறவர் பத்ரி. இவர் சுந்தர் சியின் உதவி இயக்குனர். அவரை வைத்து வீராப்பு, ஐந்தாம்படை படங்களை இயக்கியவர். சுந்தர் சி இயக்கிய கலகலப்பு, ஆக்ஷன் படங்களுக்கு பத்ரிதான் வசனம் எழுதியிருந்தார். இவர் கடைசியாக இயக்கிய நாங்க ரொம்ப பிஸி படத்தை சுந்தர் சி தயாரித்திருந்தார். சிஷ்யனுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்துவரும் சுந்தர் சி. மீண்டும் அவருக்கு இயக்குனர் வாய்ப்பளித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சுந்தர் சி. தற்போது அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை ஆர்யா, ராஷி கண்ணா, ஆன்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகியோரை வைத்து இயக்கி வருகிறார். பத்ரி இயக்கத்தில் அவரும், ஜெய்யும் நடிக்கும் படம் ஜுலை 12 முதல் தொடங்குகிறது. புதுச்சேரியில் முதல்கட்டப் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளனர்.

First published:

Tags: Sundar.C