சுந்தர்.சி நடிப்பில் உருவாகும் ‘தலைநகரம் 2’ - வடிவேலு நடிக்கிறாரா?

தலைநகரம் படத்தின் 2-ம் பாகம் விரைவில் உருவாக உள்ளது.

சுந்தர்.சி நடிப்பில் உருவாகும் ‘தலைநகரம் 2’ - வடிவேலு நடிக்கிறாரா?
தலைநகரம் 2
  • Share this:
2006-ம் ஆண்டு சுந்தர்.சி ஹீரோவாக அறிமுகமான படம் தலைநகரம். அவருடன் வடிவேலு, போஸ் வெங்கட், ஜோதிர்மயி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சுராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. படத்தின் வெற்றியில் காமெடிக்கும் முக்கிய இடம் இருந்தது.

இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை வி.இசட்.துரை இயக்க இருக்கிறார். சுந்தர்.சி - வி.இசட்.துரை ஏற்கெனவே இருட்டு என்ற படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். தற்போது அமீரின் நாற்காலி படத்தை இயக்கி வரும் இயக்குநர் துரை, ஊரடங்கு முடிந்து இயல்புநிலை திரும்பிய பின்னர் தலைநகரம் 2 படத்தை துவங்க இருக்கிறார். அதற்காக ஊரடங்கில் தாடி வளர்த்து புதிய தோற்றத்துக்கு தயாராகி வருகிறார். விரைவில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளின் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைநகரம் 2 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தில் வடிவேலு இடம்பெறுவாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. மெர்சல், சிவலிங்கா ஆகிய படங்களுக்கு பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


மேலும் படிக்க: ரஜினி, அஜித்தைத் தொடர்ந்து, அதிரடி முடிவெடுத்த நடிகர் சூர்யா...

முன்னதாக முகவரி, காதல் சடுகுடு, தொட்டி ஜெயா உள்ளிட்ட பல படங்களை இயக்குநர் வி.இசட்.துரை இயக்கியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
First published: June 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading