நடிகர் பிரபாஸ் தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார். ராதே ஷ்யாம், சலார், ஆதிபுருஷ் ஆகிய படங்கள் அவர் கைவசம் உள்ளது. இதில் ஆதிபுருஷ் புராண கதையாக தயாராகிறது.
புராணம் என்றால் சிஜி தேவை. அதில் தான் மாய உலகங்களை தோற்றுவிக்க முடியும். படைப்பு கடவுள் பிரம்மா என்பது புராண நம்பிக்கை என்றால், இன்றைய யதார்த்த பிரம்மா சிஜி. படப்பிடிப்புக்கு மட்டும் 150 நாள்கள் ஒதுக்கியிருந்தார்கள்.
மும்பையில் ஆதிபுருஷ் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. சுமார் 60 தினங்கள் அங்கு படப்பிடிப்பு நடத்திய நிலையில், கொரோனா இரண்டாம் அலை காரணமாக படப்பிடிப்பை நிறுத்தினர். ஜுன் இறுதியில் இருந்து ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடக்கிறது. சிஜியில் உருவாக்கப்படும் உலகம் என்பதால் எந்த ஸ்டுடியோவுக்குள்ளும் க்ரீன்மேட் போட்டு படப்பிடிப்பை நடத்தலாம். அதைத்தான் செய்யவிருக்கிறார்கள்.
ஆதிபுருஷில் பிரபாஸுடன் சைப் அலிகான்,
கீர்த்தி சனான் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கன்னடத்தின் முன்னணி நடிகர் சுதீப்பை நடிக்க வைக்கவும்
பேச்சுவார்த்தை நடக்கிறது. இவர் விபீஷணன் வேடத்தில் நடிக்கக் கூடும் என்கின்றன செய்திகள்.
பிரமாண்டமாக தயாராகும் ஆதிபுருஷை டி சீரிஸ் நிறுவனம் தயாரிக்கிறது, ஓம் ரவுட் படத்தை இயக்குகிறார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.