Nayanthara: நயன்தாராவுக்கு வில்லனாக நடிக்கும் உச்ச நட்சத்திரம்!

நயன்தாரா

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • Share this:
    நயன்தாராவுக்கு வில்லனாக முன்னணி நடிகர் ஒருவர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    நடிகை நயன்தாரா, ஃபேஷன் ஸ்டுடியோவுடன் இரண்டு படங்களில் நடிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது. இந்நிறுவனம் விஜய் சேதுபதியின் 'சீதகாதி', தமன்னாவின் 'பெட்ரோமேக்ஸ்' மற்றும் 'அந்தகாரம்' உள்ளிட்ட படங்களைத் தயாரித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்துடன் நயன்தாரா ஒப்பந்தமாகிய செய்தி இணையத்தில் வெளியானதும், அந்த இரண்டு படத்தின் குழுவினரை அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

    இந்நிலையில் அறிமுக இயக்குநர் ஒருவர் இதில் ஒரு படத்தை இயக்குவதாகவும் அதில் நயன்தாராவுக்கு வில்லனாக கன்னட சூப்பர் ஸ்டார், ‘நான் ஈ’ சுதீப் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நயன்தாரா தற்போது சிவா இயக்கும் ’அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள ’காத்து வக்குல ரெண்டு காதல்’ படத்தில், விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோர் இணைந்து நடிக்கிறார். அவரது 'நெற்றிக்கண்' திரைப்படம் OTT-யில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, விரைவில் எந்த நேரத்திலும் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ’நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனம் பெற்ற சுதீப், இறுதியாக தபாங் 3 படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: