முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நடிகர் விஜய்யை கலாய்த்து போட்ட வீடியோ... அது கூட தெரியாம கமெண்ட் செய்த நடிகர் ஸ்ரீமன்!

நடிகர் விஜய்யை கலாய்த்து போட்ட வீடியோ... அது கூட தெரியாம கமெண்ட் செய்த நடிகர் ஸ்ரீமன்!

ஸ்ரீமன் மற்றும் விஜய்

ஸ்ரீமன் மற்றும் விஜய்

நடிகர் விஜயை கலாய்த்து போட்ட வீடியோ என்று கூட தெரியாம ஷேர் செய்துள்ளார் நடிகர் ஸ்ரீமன்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

'புதிய மன்னர்கள்' படம் மூலம் அறிமுகமாகி விஜய்யின் 'லவ் டுடே' படம் மூலம் பிரபாலானவர் நடிகர் ஸ்ரீமன். இவர் விஜய்யுடன் இணைந்து 'நிலாவே வா', 'நெஞ்சினிலே', 'ப்ரெண்ட்ஸ்', 'வசீகரா', 'போக்கிரி', 'வில்லு', 'சுறா', 'பைரவா' மற்றும் 'மாஸ்டர்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஸ்ரீமன் நடிகர் மட்டுமின்றி விஜயின் நெருங்கிய நண்பராகவும் உள்ளார்.

இந்நிலையில் விஜயின் வாரிசு படம் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. அதிலும் விஜயுடன் நடிகர் ஸ்ரீமன் இணைந்து நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

படப்பிடிப்பு பணிகள் கடந்த ஜனவரி 2-ம் தேதி துவங்கியது. இந்தப் படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், நடன இயக்குநர் சாண்டி, நடிகை ப்ரியா ஆனந்த், நடிகர் அர்ஜுன், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், மலையாள சினிமா நடிகர் மேத்யூ தாமஸ், சஞ்சய் தத் ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்திற்கான இசையை அனிருத் அமைக்கிறார். இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமும், சாட்டிலைட் உரிமத்தை சன் டிவியும் பெற்றுள்ளது. இந்நிலையில் படம் இந்தாண்டு அக்டோபர் 19-ம் தேதி வெளியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ட்விட்டரில் பாஸ்கி என்ற நபர் விஜயின் நண்பரும் நடிகருமான ஸ்ரீமன் நடிப்பில் வெளியான ஒரு படத்தின் வீடியோவை பகிர்ந்து விஜயை கலாய்த்துள்ளார். அது தெரியாத ஸ்ரீமன் தன்னை பாராட்டுவதாக நினைத்து அந்த வீடியோவுக்கு  கற்றுக்கொள்கிறேன் என்று கமெண்ட் செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vijay