Home /News /entertainment /

குழந்தைகள் முன் நிர்வாணமாக நின்றதாக கும்கி பட நடிகர் ஸ்ரீஜித் ரவி போக்சோவில் கைது

குழந்தைகள் முன் நிர்வாணமாக நின்றதாக கும்கி பட நடிகர் ஸ்ரீஜித் ரவி போக்சோவில் கைது

ஸ்ரீஜித் ரவி

ஸ்ரீஜித் ரவி

பூங்கா அருகே உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் வாகனத்தையும், ஸ்ரீஜித் ரவியையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

    குழந்தைகள் முன் நிர்வாணமாக நின்றதாக மலையாள நடிகர் ஸ்ரீஜித் ரவி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். அவர் மீது திருச்சூர் மேற்கு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    இரண்டு நாட்களுக்கு முன்பு அய்யந்தோளில் உள்ள பூங்கா அருகே இந்த சம்பவம் நடந்தது. 14 மற்றும் 9 வயதுள்ள குழந்தைகள் அளித்த புகாரின் பேரில் நடிகர் ஸ்ரீஜித் ரவி கைது செய்யப்பட்டுள்ளார். 100 படங்களுக்கும் மேல் நடித்துள்ள ஸ்ரீஜித் ரவி தமிழில் கும்கி, அசுரவதம், கதகளி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

    என் உடலைப் பயன்படுத்திக் கொண்டார்கள், வாழ்க்கைக்காக ஏங்கினேன் - இறப்பதற்கு முன் சில்க் ஸ்மிதா எழுதிய கடிதம் 

    குழந்தைகள் அளித்துள்ள புகாரில், கருப்பு நிற காரில் வந்த ஒருவர் தனது பிறப்புறுப்பை காட்டியதாக கூறியுள்ளனர். அவர்களால் அந்த நடிகரை அடையாளம் காண முடியாவிட்டாலும், தெரிந்த நபர் தான் என்று தெரிவித்துள்ளனர். பூங்கா அருகே உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் வாகனத்தையும், ஸ்ரீஜித் ரவியையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். பின்னர், குழந்தைகளும் காட்சிகளில் இருந்த நடிகரை அடையாளம் கண்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தவிர, சமீபத்தில் பாலக்காட்டில் இதே போன்ற ஒரு வழக்கில் நடிகர் ஸ்ரீஜித் ரவி கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Malayalam actor

    அடுத்த செய்தி