• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • குணச்சித்திர நடிகர் சௌந்தர்ராஜாவுக்கு குழந்தைகள் தினத்தில் கிடைத்த மகிழ்ச்சி

குணச்சித்திர நடிகர் சௌந்தர்ராஜாவுக்கு குழந்தைகள் தினத்தில் கிடைத்த மகிழ்ச்சி

சௌந்தர்ராஜா

சௌந்தர்ராஜா

தமிழ்சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துவரும் சௌந்தர்ராஜாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

  • Share this:
    தமிழ் சினிமாவில் எதிர் நாயகனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருபவர் சௌந்தரராஜா. இவர் சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில், ஜகமே தந்திரம் போன்ற படங்களில் கவனிக்க வைக்கும் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

    நடிகர் சௌந்தரராஜா, தமன்னா என்பவரை 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக கூறும் சௌந்தரராஜா, குழந்தைகள் தினத்தில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது என்றார்.

    மேலும் மண்ணுக்கும் மக்களுக்கும் அதிக மதிப்பு கொடுக்கும் சௌந்தர ராஜா, இன்று பிறந்த தன் மகளுக்கு மரக்கன்று ஒன்றை பரிசாக அளித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: